சென்னையைச் சேர்ந்த கோதண்டராமன் 25 வருஷங்களா தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக ஒர்க் பண்ணி வந்தார்.
இவருக்கு வயது 65. ஸ்டண்ட் மாஸ்டராக மட்டுமல்லாமல் காமெடி நடிகராகவும் கவனம் ஈர்த்தவர் கோதண்டராமன்.
சில கேரக்டர் ரோல்களிலும் நடித்திருக்கிறார். சுந்தர்.சி-யின் `கலகலப்பு’ திரைப்படத்தில் `பேய்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்த கோதண்டராமன் அடுத்தடுத்து பல காமெடி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அத்திரைப்படத்தில் சந்தானத்தின் குழுவில் ஒரு நபராக வந்து அத்தனை நகைச்சுவை செய்திருப்பார்.
உடல்நலக் குறைவால் பெரம்பூரிலுள்ள தனது இல்லத்தில் நேற்று இரவு 10.20 மணியளவில் காலமானார்.
இவரின் இறுதிச் சடங்கு இன்று மாலை நடைபெறவிருக்கிறது. இவரின் மறைவுக்கு ஸ்டண்ட் யூனியனும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Related posts:
உங்களை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன்.! - சக்க போடு போடு ராஜா இசை அமைப்பாளர் வருத்தம்!November 13, 2017
Anya’s Tutorial விமர்சனம் !July 3, 2022
பொன்னியின் செல்வனை அடுத்து, சரத்குமார் நடிக்கும் படத்தின் படபிடிப்பு துவங்கியதுSeptember 19, 2021
’செய்’ படத்துக்கு போட்டியாக "திமிர் பிடிச்சவன்" - நகுல் வேதனை!November 10, 2018
நான் ஒரு கலைஞனாக மட்டும் சாகக் கூடாது.! - கமல் விருப்பம்March 8, 2018