பேட்ட இசை வெளியீட்டு விழாவில் ’ஜானு’வை லுக் விட்ட விஜய்சேதுபதி

சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் படம் பேட்ட. பொங்கலுக்கு வெளியாகும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில், ரஜினிகாந்த், கலாநிதி மாறன், கார்த்திக் சுப்புராஜ், சசிக்குமார், சிம்ரன், த்ரிஷா, சமுத்திரக் கனி, பாபி சிம்ஹா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த பேட்ட இசை வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி பேசியது,

நாம எல்லாரும் கனவு காணுறது வழக்கமதான், ஆனா நான் காணாத ஒரு கனவு நடந்தது, அதுதான் ரஜினி சாருடன் இணைந்து நடித்தது சந்தோஷமாக இருக்கிறது. அவர் கூட நடிச்சதே பெரிய விஷயம். அவர் கேமரா முன் வந்து நின்றால், அவரை பார்கக நிறைய பேர் இருக்காங்க. ரசிகர்களுக்காக இப்போ வரை அவர் பொறுப்புடன் நடிக்கிறார். ரஜினி சாரின் நடிப்பை ஆண்டவரே கைத் தட்டுவார் அவரைப் போல பொறுப்பான நடிகராக வர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

கார்த்திக் சுப்புராஜை ஷார்ட் பிலிம் பண்ணும் போதுல இருந்து தெரியும். ஷார்ட் பிலிம்லயே நிறைய சஸ்பென்ஸ் வைப்பாரு, அடுத்தடுத்த காட்சிகள் சுவாரஸ்யமா இருக்கும். இந்த படத்துலேயும் அதே மாதிரியான காட்சிகள் நிறையவே இருக்கு. கடைசி காட்சி வரை எல்லாரையும் பிரமிக்க வைப்பாரு. பேட்டை படத்திலும் எல்லாம் இருக்கு, கடைசி வரை சுவாரஸ்யம் இருக்கு.

எப்பவுமே பெரிய ஆள எதிர்த்தா தான் பெரிய ஆளாக முடியும். நான் படத்தில் வில்லன் தான்.

ஆங்.. , த்ரிஷா இந்தப் படத்துல நடிச்சிருக்காங்க. ஏற்கெனவே 96 படம், ஞாபகத்துக்கு வருது. ரஜினி சார்… இது என் ஜானு சார்”