கோலிவுட்டில் சீனியர் மோஸ்ட் (எக்ஸ்)( நடிகர்களில் ஒருவரான ஆனந்தன் பேத்தியும், பிரபல நடிகை டிஸ்கோ சாந்தியின் தங்கையுமான லலிதாகுமாரியும், நடிகர் பிரகாஷ்ராஜும் கடந்த 1996-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஒரு மகன் பிறந்து விபத்தில் காலமாகிவிட்டார். கடந்த 2009-ம் ஆண்டு லலிதாகுமாரியும் பிரகாஷ்ராஜும் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் பரஸ்பர விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்தனர். இதன் அடிப்படையில், விவாகரத்து வழங்கப்பட்டது. விவாகரத்து பெற்றாலும் பிரகாஷ்ராஜும் லலிதாகுமாரியும் சுமுகமாகவே இருந்தனர். அத்துடன் பிரகாஷ்ராஜும் தன் மகள்களை அடிக்கடி சந்தித்துவந்தார். பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் வெளியான ‘பயணம்’ படத்தை வெளியிடுவதற்கு சில ஃபைனாசியர்களால் சிக்கல் ஏற்பட்டது. அந்தச் சமயத்தில்கூட லலிதாகுமாரி தன் சொத்தை உத்தரவாதமாக அளித்து அந்தப் படம் வெளியாக உதவினார். பின்னர், பிரகாஷ்ராஜ் வேறொரு பெண்ணை மணம் முடித்து விட்டார். அதே சமயம் இவர்களுக்குள்ளான உறவில் சிக்கல் இல்லாமல் இருந்தது. இந்நிலையில்தான் பிரகாஷ்ராஜின் இரண்டாவது மகள் அபிர்னா, இன்று காலை முதல் காணவில்லை என்றும், தாம் பிரகாஷ்ராஜின் உறவினர் என்றும் ஒருவர் சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் செய்திகள் கன்ணாபின்னவென வெளியாகி பரவின.
இந்நிலையில், லலிதாகுமாரியின் அண்ணன் மகள் அபிரினா வயது 17, 12வகுப்பு அண்ணாசாலை சர்ச்பார்க்கில் படித்துவரும் இவர் கடந்த 6ஆம் தேதி பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.! இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு இன்று மாலை அவரது இல்லத்தில் நடைபெற்றது உடன் அவரது அண்ணன் மனைவி ஷர்லி இருவரும் இணைந்து பேட்டியளத்தனர்.லலிதா குமாரியின் அண்ணன் பெயர் அருன்மொழி வர்மன் இது குறித்து R4 பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்
இ து குறித்து செய்தியாளர்களிடம் விளக்கமாக பேசிய லலிதா குமாரி, “எனது அண்ணன் அருண் மகள் அப்ரினாவை கடந்த 6ஆம் தேதி முதல் காணாமல் போகி இன்றோடு 5 நாட்கள் ஆகின்றது இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. காவல் துறையில் புகார் தெரிவித்ததன் பேரில் அவர்கள் முழு ஆதரவோடு செயல்பட்டு வருகிறார்கள் ஆனாலும் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. சர்ச் பார்க் பள்ளியில் இதை பற்றி விசாரித்த போது பள்ளியில் மொத்தம் 56 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் எங்களுக்கு சம்மந்தப்பட்ட இடத்தில் உள்ள கேமராக்கள் வேலை செய்யாததால் போதுமான தகவல்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை.
காவல் துறைக்கும் போதிய ஆதாரங்கள் பள்ளி அலுவலகத்திலிருந்து கிடைக்கவில்லை பள்ளி மெத்தனம் காட்டுவது போல் தோன்றுகிறது. இந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஊடகங்கள் மூலம் என் அண்ணன் மகள் அப்ரினா கிடைப்பால் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார் நடிகை லலிதா குமாரி