மிக மிக அவசரம்…. கதையைக் கேட்டதும் பாடலாசிரியராக மாறிய இயக்குநர் சேரன்!

மிக மிக அவசரம்…. கதையைக் கேட்டதும் பாடலாசிரியராக மாறிய இயக்குநர் சேரன்!

பெரிய நட்சத்திரங்கள் இல்லை... கவர்ச்சியான பிரமாண்டங்கள் இல்லை... ஆனாலும் ஒரு படம் இன்றைக்கு மீடியாவில் பரபரப்பாகப் பேசப்படுகிறது என்றால் அது மிக மிக அவசரம்.  கதை, இன்றைய சூழலுக்கு அதன் அவசியம்தான் அந்தப் படத்துக்கு இப்படியொரு எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. பெண் போலீசார் குறித்து இதுவரை பேசப்படாத ஒரு விஷயத்தை மையமாக வைத்து மிகவும் விறுவிறுப்புடன் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் சுரேஷ் காமாட்சி. இயக்குநராக அவருக்கு இது முதல் படம். ஆனால் தயாரிப்பாளராக மூன்றாவது படம். ஏற்கெனவே அமைதிப்படை 2, கங்காரு படங்களை இயக்கியவர். "இந்தக் கதையை எழுதியவர் இயக்குநர் ஜெகன். கதையைப் படித்ததுமே, இதுதான் இயக்குநராக எனக்கு முதல் படமாக இருக்க வேண்டும் எனத் தீர்மானித்து களமிறங்கினேன். திட்டமிட்டபடி படத்தை எடுத்து முடித்துவிட்டோம். திருப்தியாக வந்திருக்கிறது படம். இந்தப் படத்தின் கதையைக் கேட்டபோதே, பாடலாசிரியராக மாறிவிட்டார் இயக்குநர் சேரன். அவராகவே முன்வந்து ஒரு பாடலை எழுதிவிட்டார். 'பெண்ணிற்கோர் தீமை செய்தோம்...'…
Read More