30
Aug
சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் 'விவேகம்' பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியானது. இப்படத்துக்கு மாறி மாறி ஒரு குழப்பமான விமர்சனங்கள் வந்துள்ளன. குறிப்பாக புளூசட்டை என்ற அடைமொழிக்காரரான மாறன் என்பவரது விமர்சனம், கோலிவுட் அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய விமர்சனத்துக்கு திரையுலகினர் பலரும் ஆட்சேபம் தெரிவித்தனர். அதே சமயம் 'விவேகம்' படத்துக்கான எதிர்மறையான விமர்சனங்கள் குறித்து இயக்குநர் சிவா, “எதிர்மறை விமர்சனங்களைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் பலரும் இப்படத்துக்கு நல்ல விமர்சனங்களைக் கொடுத்திருக்கிறார்கள். எங்களுடைய முயற்சிக்கு கிடைத்த பாராட்டால் நன்றி கடன்பட்டு இருக்கிறேன்.தண்ணி அடிப்பது, தம் அடிப்பது, ஆபாசமாக ஒரு வசனம் எதுவுமின்றி ஒரு நேர்மையான திரைப்படம் என்று பலரும் தெரிவித்த கருத்தால் நெகிழ்ந்திருக்கிறேன். அஜித் சாரின் உறுதுணைக்கும், ரசிகர்களின் உறுதுணைக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்மறை விமர்சனங்களை நான் பார்ப்பதில்லை. நியாயமான விமர்சனங்களைப் பார்த்தேன். அதில் குறிப்பிட்டுள்ள ப்ளஸ் மற்றும் மைனஸ் அனைத்தையுமே…