30
Nov
அதென்னமோ தெரியாது, தங்கப்பதக்கம் படத்தில் வரும் தத்திச்செல்லும் முத்துக் கண்ணன் சிரிப்பு.. பாடல். காஞ்சிபுரம் கிருஷ்ணா டாக்கீஸ்ல ரிலீஸ். அப்போ பார்த்ததிலிருந்து வாணி ஜெயராம் குரல் மேல் அப்படியொரு காதல். படத்தில் பாடும் கே.ஆர்விஜயாவோடு வாணியும் நம்முள் ஊடுறுவினார்.. கொஞ்சநஞ்சமல்ல வெறித்தனமாக. பாடலில் வரும் . காவல் தலைவன் ஞானத்தமிழன் எந்தன் துணைவன் இன்பக்குமரன்.. என்ற வரிகளை வாணி பாடும்போது, அதிலும் இரண்டாவது முறை இந்த வரிகளை இழுக்கும்போது என்ன கெமிஸ்ட்ரியோ?. 1974லிருந்து பாடல் உருகவைத்துக்கொண்டிருக்கிறது. ஒருவேளை நடை உடை பாவனை அனைத்திலும கே.ஆர் விஜயா மாதிரியே இந்த பள்ளிக்கூட டீச்சரின் தாக்கமா? இல்லை தோழிக்கும் இந்த சேம் வாய்ஸ் இருந்ததால் குடைந்து கொண்டே வந்த தாக்கமா? என்ன இம்சையோ போடா வெங்கடேசா... அடுத்து எங்கம்மா சபதம். அன்பு மேகமே இங்கு ஓடி வா பாடல்.. மேலே சொன்ன இரண்டு பாடல்களையும் விவித பாரதியில் கேட்கும்போதெல்லாம். மனசு காற்றில் பறக்கும். சரி வாணி…