கஜோலை இயக்கும் நடிகை ரேவதி!

கஜோலை இயக்கும் நடிகை ரேவதி!

நடிகையாக பல பாரட்டுகளையும் , விருதுகளையும் பெற்ற நடிகை ரேவதி, இயக்குனராகவும் தனது பரிமாணத்தை காட்டியுள்ளார். பல திரைபடங்களை இயக்கிய ரேவதி, சிறிது காலம் இயக்கம் பக்கம் வராமல் இருந்தார். இப்போது , ஔர் புதிய திரைப்படத்திய இயக்கவுள்ளார். 'தி லாஸ்ட் ஹுர்ரா' என பெயரிடப்பட்ட திரைப்படத்தை நடிகை ரேவதி இயக்குகிறார், அதில் கஜோல் ஹீரோயினாக நடிக்கிறார். இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கபடுகிறது. இந்தப் படம், சுஜாதா என்கிற தாயின் போராட்டங்களை, அவள் எப்படி புன்னகையுடன் எதிர்கொள்கிறாள் என்பதைச் சொல்லும் படமாக இருக்கும் என படக்குழு கூறியுள்ளனர். சூரஜ் சிங், ஷ்ரத்தா அகர்வால் இணைந்து பிலைவ் ப்ரொடக்‌ஷன்ஸ் மற்றும் டேக் 23 ஸ்டூடியோஸ் சார்பில் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். நடிகை ரேவதி 2002-ம் ஆண்டு இயக்கிய ’மித்ர மை ஃப்ரெண்ட்’ திரைப்படம் தேசிய விருது வாங்கியது. 2004-ம் ஆண்டு…
Read More