என்னுடன் நடித்தது பெருமை என்று ரஜினி சொன்னார்- வஸந்த் ரவி !!

என்னுடன் நடித்தது பெருமை என்று ரஜினி சொன்னார்- வஸந்த் ரவி !!

வித்தியாசமான கதைத்தேர்வு மூலம், தனித்த கதாபாத்திரங்களில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி வருபவர் நடிகர் வசந்த்ரவி. ‘தரமணி’, ‘ராக்கி’, ‘அஸ்வின்ஸ்’ என சீரியஸ் கதைக்களங்களில் நடித்தவர் அந்த ஜானரில் இருந்து வெளியே வந்து நடித்துள்ள ஜாலியான படம்தான் ’பொன் ஒன்று கண்டேன்’. ஜியோ சினிமாஸில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. நாளை மறுநாள் (ஏப்ரல் 18) வசந்த் ரவியின் பிறந்தநாள். இதற்காக பத்திரிக்கையாளர்களை சந்தித்துப் பேசினார் ”என்னுடைய பிறந்தநாள் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி வருகிறது. என்னுடைய முதல் படம் ‘தரமணி’யில் இருந்து எனக்கு ஆதரவு கொடுத்து வரும் மீடியா மற்றும் பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். அழைப்பை ஏற்று வந்தவர்கள் அனைவருக்கும் நன்றி நீங்கள் கொடுத்த நிறை, குறைகள்தான் என்னை இந்த அளவுக்கு வளர்த்து கொண்டு வந்திருக்கிறது. நிறைய பேர் என்னிடம் ‘எப்போது ஜாலியான படம் செய்வீர்கள்? டான்ஸ் ஆடுவீர்கள்?’ என்றெல்லாம் கேட்பீர்கள். அதற்கான பதிலாகதான் ஜியோ சினிமாவில்…
Read More
நடித்துக்கொண்டே இருக்கவேண்டும். அவ்வளவுதான்!- ’பரோட்டா’ சூரி பேட்டி!

நடித்துக்கொண்டே இருக்கவேண்டும். அவ்வளவுதான்!- ’பரோட்டா’ சூரி பேட்டி!

அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதே மனித இயல்பு. தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான சூரி அடுத்து கதையின் நாயகனாக வெற்றிமாறன் இயக்கத்தில்  விடுதலை படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து குணச்சித்திர வேடங்களிலும் கலக்கி வருகிறார். அவரது சினிமா வாழ்க்கையே எந்த பின்புலமும் இல்லாமல் தன்னம்பிக்கை, விடாமுயற்சியால் அடைந்த முன்னேற்றத்துக்கு எடுத்துக்காட்டானதாக அமைந்துவிட்டது. அவர் அளித்த பேட்டி: இன்றைய பிறந்தநாள் போட்டோஷூட்டும் வீடியோவும் இணையத்தில் வைரலாகிறதே? இன்றைய பிறந்தநாள் மிகவும் சந்தோஷமான, திருப்தியான நாளாக அமைகிறது. கொரோனாவில் இருந்து மக்கள் மீண்டு வருவது தான் முதலில் நிம்மதியை தருகிறது. படப்பிடிப்புக்காக தாடி எடுக்க வேண்டி வந்தது. அதற்கு முன்பு ஒரு போட்டோஷூட் எடுக்க சொல்லி நண்பர்கள் கேட்டார்கள். அதற்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. இதற்கு முன்பு தாடியில் எடுத்த போட்டோக்களே வைரலாகி வெற்றி அண்ணன் முதல் ரஜினி சார் வரை பலரும் பாராட்டினார்கள். இந்த படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பும்…
Read More
ஷங்கர் + ரஜினி உருவாகி வரும் 2 பாயிண்ட் 0 ஷூட்டிங் ஓவர்!

ஷங்கர் + ரஜினி உருவாகி வரும் 2 பாயிண்ட் 0 ஷூட்டிங் ஓவர்!

ரஜினி நடிப்பில் உருவாகி வரும் '2.0’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றுள்ளது. இறுதிகட்டப் பணிகளில் முழுக்கவனத்தையும் செலுத்த படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.சில காட்சிகள் மற்றும் ஒரு பாடல் படப்பிடிப்பு மட்டுமே '2.0' படத்தில் மிச்சமிருந்தது. அதனை படமாக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. அப்பணிகள் யாவும் இன்றுடன் முடிக்கப்பட்டது. இதனை நாயகி ஏமிஜாக்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் வெளியிடப்பட்ட '2.0' உருவான விதம் மற்றும் 3டி பணிகளுக்கான வீடியோ பதிவுகள் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன. மேலும், அக்டோபர் 27-ம் தேதி இசை வெளியீட்டை துபாயில் பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்திருக்கிறது லைகா நிறுவனம். இதற்காக ஒட்டுமொத்த படக்குழுவினரும் துபாயிக்கு பயணிக்கவுள்ளார்கள். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் படமென்பதால், கிராபிக்ஸ் பணிகள் அதிகமாக இருப்பதால் அதில் முழுமையாக கவனம் செலுத்த படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. ரஜினி, அக்‌ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிக்க, ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் '2.0'.…
Read More
ஜி வி பிரகாஷ் படத்துக்கு ரஜினி பட தலைப்பான ‘குப்பத்து ராஜா’!

ஜி வி பிரகாஷ் படத்துக்கு ரஜினி பட தலைப்பான ‘குப்பத்து ராஜா’!

மக்கள் மத்தியில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் வெற்றிப்பட தலைப்புகள் இன்றும் பெரும் வரவேற்பு பெற்றுள்ளன. அனைவராலும் ரசிக்கப்படும் நடிகராக வெற்றி ரதத்தில் வேகமாக பயணித்து கொண்டிடுருக்கும் G V பிரகாஷ், பிரபல நடன இயக்குனர் பாபா பாஸ்கர் தான் முதல் முறையாக இயக்கவிருக்கும் படத்தில் கதநாகனாக நடித்துள்ளார். இப்படத்திற்கு 'குப்பத்து ராஜா' என்ற சூப்பர் ஸ்டார் ரஜினியின் சூப்பர் ஹிட் தலைப்பை சூட்டியுள்ளனர். இப்படத்தினை 'S Focuss' சார்பில் திரு. எம்.சரவணன், திரு. எஸ்.சிராஜ் மற்றும் திரு.T. சரவணன் ஆகியோர் தயாரித்துள்ளனர். இவர்களோடு இணைந்து படூர் ரமேஷ் இணை தயாரிப்பு செய்துள்ளார். நிர்வாக தயாரிப்பாளர் கர்ணாராஜா. இப்படத்தில் G V பிரகாஷுக்கு ஜோடியாக பூனம் பாஜ்வா மற்றும் பல்லக் லால்வானி நடித்துள்ளனர். இப்படத்தில் பார்த்திபன், M S பாஸ்கர், யோகி பாபு மற்றும் 'ஜாங்கிரி' மதுமிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். G V பிரகாஷ் இசையில், மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவில்,…
Read More
கபாலி செல்வா இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘12.12.1950’ !

கபாலி செல்வா இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘12.12.1950’ !

'' 'நாசா' வுக்கு எப்படி ஒரே ஒரு 'வாயேஜர்' விண்கலமோ, அது போல் எங்களுக்கு ஒரு ஒரு சூப்பர் ஸ்டார் '' எனக்கூறியுள்ளார் இயக்குனர் மற்றும் நடிகர் கபாலி செல்வா. கபாலி செல்வா இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியிருக்கும் '12.12.1950' படம் என்றுமே புகழின் உச்சியிலும், மக்களின் மனத்திலும் ஆட்சி நடத்தும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஒரு தீவிர ரசிகன் பற்றிய படமாகும். இப்படத்தின் முதல் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் 'நாசா' விண்வெளி மையம் நேற்று தங்களது 'வாயேஜர்' விண்கலம் விண்ணுக்கு சென்று 40 ஆண்டு காலம் ஆகியுள்ளதை கொண்டாடியது. இதனை தொடர்ந்து 40க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக சாதித்து , விண்வெளி யையும் மிஞ்சும் ரசிகர் படை கொண்டுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பற்றி கபாலி செல்வா 'நாசா' விண்வெளி மையத்திற்கு சூப்பர் ஸ்டாரின் புகழை பற்றியும் 40 ஆண்டு கால…
Read More
‘2.0’ படத்தை விளம்பரப்படுத்த சர்வதேச சுற்றுப்பயணம்:  லைகா  தகவல்

‘2.0’ படத்தை விளம்பரப்படுத்த சர்வதேச சுற்றுப்பயணம்: லைகா தகவல்

2.0' படத்தை விளம்பரப்படுத்த சர்வதேச சுற்றுப்பயணம் விரைவில் துவங்கும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷயகுமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள '2.0' படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை விளம்பரப்படுத்தும் பணிகள் இன்னும் துவங்கப்படவில்லை. ஜனவரி 2018-ல் வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளை விரைவில் துவங்கவுள்ளது படக்குழு. லைகா நிறுவனத்தின் தலைமை செயல் நிர்வாகியான ராஜூ மகாலிங்கம் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  Follow Raju Mahalingam @rajumahalingam 2.0 promotion kick starts......#2point0 1:04 PM - 24 Jun 2017 அந்த வீடியோ பதிவில், '2.0' படத்தை விளம்பரப்படுத்த விரைவில் சர்வதேச சுற்றுப்பயணம் நடைபெறவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்கள். இதில் ஒட்டுமொத்த படக்குழுவும் பங்கேற்பார்கள் என தெரிகிறது. '2.0' படத்தின் படப்பிடிப்பு முடிவுற்று, கிராபிக்ஸ் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் உருவாகியுள்ள முழுமையான 3டி தொழில்நுட்பத்திலான படம் என்பதால், கிராபிக்ஸ்…
Read More
பாரதிராஜாவின் இளமைக்கு காரணம் தெரியுமா? – ரஜினி சுவாரஸ்ய பேச்சு!

பாரதிராஜாவின் இளமைக்கு காரணம் தெரியுமா? – ரஜினி சுவாரஸ்ய பேச்சு!

இயக்குநர் இமயம் பாரதிராஜா தன்னுடைய பெயரில் ஒரு திரைப்படக் கல்லூரியை துவக்கியிருக்கிறார். பாரதிராஜா சர்வதேச திரைப்படக் கல்லூரி என்ற பெயர் சூட்டப்பட்ட இந்தக் கல்லூரியின் துவக்க விழா  நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. விழாவில் நடிகர்கள் கமலஹாசன், நாசர், சிவகுமார், கார்த்தி, வைரமுத்து மற்றும் இயக்குனர்கள் பார்த்திபன், பாண்டிராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய நடிகர் கலமஹாசன், கற்ற வித்தையை அனைவருக்கும் கற்றுக்கொடுக்க உள்ள பாரதிராஜா சமண முனிவருக்கு ஈடானவர். தடைகளை தாண்டி கலைஞனை உருவாக்கத் தெரிந்தவர். சினிமா என்பது பல பேர் சேர்ந்து உருவாக்கும் ஒரு ஜனநாயக கலை என அவர் புகழாரம் சூட்டினார். பின்னர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தேசிய விருது வழங்குவதில் பாகுபாடு காட்டுவதாக தெரிவித்த கருத்து குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கமலஹாசன், தேசிய விருது தேர்வு செய்வதில் நல்லதும் இருக்கும், கெட்டதும் இருக்கும். தேசிய விருது தேர்வுக்குழுவில் 12 பேர் உள்ளனர் என…
Read More
சந்திரஹாசன் இரங்கல் கூட்டத்தில் ரஜினிகாந்த்!

சந்திரஹாசன் இரங்கல் கூட்டத்தில் ரஜினிகாந்த்!

நடிகர் கமல்ஹாசன் அண்ணனும், சினிமா தயாரிப்பாளருமான சந்திரஹாசன் சமீபத்தில் லண்டனில் மரணம் அடந்தார். அவரது மறைவுக்கான இரங்கல் கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நேற்று நடந்தது. இதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு சந்திரஹாசன் உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசியதாவது:- “என் நண்பர் கமல்ஹாசனுக்கு அவரை பெற்றவர் மற்றும் வளர்த்த சாருஹாசன், ஆளாக்கிய சந்திரஹாசன் என்று மூன்று தகப்பனார்கள். சந்திரஹாசனை நான் இரண்டு தடவை பார்த்து இருக்கிறேன். அவரிடம் பழகும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. நண்பர் கமல்ஹாசன் சினிமாவில் அதிகம் சம்பாதிக்காதவர். இப்போது உள்ள நடிகர்களிடம் இருக்கும் பணம் கூட அவரிடம் கிடையாது. அதற்காக அவர் கவலைப்பட்டதும் இல்லை. அதையும் மீறி கொஞ்சம் அவரிடம் பணம் இருக்கிறது என்றால் அதற்கு காரணம், சந்திரஹாசன். இனிமேல் எப்படி கமல்ஹாசன் சம்பாதிக்கப்போகிறார். சம்பாதித்ததை எப்படி பாதுகாக்கப்போகிறார் என்றுதான் நான் இப்போது சிந்திக்கிறேன். கமல்ஹாசன் மாதிரி ஒரு கோபக்காரரை நான் பார்த்தது…
Read More