பாகுபலி புகழ் பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தில் நடிகர் அருண் விஜய்!

பாகுபலி புகழ் பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தில் நடிகர் அருண் விஜய்!

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் பாகுபலி. இந்த ஒற்றை படம் மூலம் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களை தன் வசம் கவர்ந்தவர் பிரபாஸ். இதனால் பாகுபலி வெற்றிக்கு பின் அவரின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அடுத்ததாக சாஹோ என்கிற படத்தில் பிரபாஸ் நடித்து வரும் நிலையில், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் இந்த படம் உருவாகி வருகிறது. சுஜீத் இயக்கும் இந்த படத்தில் பிரபாஸ்-க்கு போலீஸ் அதிகாரி வேடம் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அருண் விஜய் நடிக்கிறார். இந்த தகவலை அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். சாஹோ படத்தில் தாம் இணைவது தமக்கு பெரு மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். பிரபாஸ்-க்கு போலீஸ் அதிகாரி கெட்டப் என கூறப்படுவதால் அதற்கு இணையான வில்லன் கெட்டப்பில் அருண் விஜய்யின் கதாபாத்திரம் இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.
Read More