கல்லூரிப் பின்னணியில் அசத்தும் போர் !!

கல்லூரிப் பின்னணியில் அசத்தும் போர் !!

அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் நடிப்பில், டேவிட் படப் புகழ் இயக்குநர் பிஜோய் நம்பியார் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் போர். மணிரத்தினம் ஸ்கூலில் இருந்து வந்தவர் என்பதால் இயக்குனர் பிஜோய் நம்பியார் திரையாக்கத்தில், சினிமாவிற்கு ஒரு தரமான படைப்பிற்குண்டான அத்தனை தெளிவுகளும் அட்டகாசமான மேக்கிங்கும் படம் முழுக்க தெரிகிறது. இரு இளைஞர்களுக்குள் ஏற்படும் தவறான புரிதலில், அவர்கள் இருவரின் ஈகோ முட்டிக்கொள்ள, மொத்தமாக ஒரு கல்லூரியே போர்களமாகிறது. இது தான் படத்தின் மையக்கதை. அர்ஜுன் தாஸ் கல்லூரி முடித்து தன்னுடைய பைனல் தீசிஸை சப்மிட் செய்யும் வேலைகளில் இருக்கிறார். அந்த கல்லூரிக்கு புதிதாக வரும் இளம் மாணவன் காளிதாஸ் ஜெயராம், இருவருக்கும் சின்ன வயதில் ஏற்பட்ட ஒரு பகை இப்போது போராக வெடிக்கிறது. இந்தப்போரில் அவர்களைச் சுற்றி இருப்பவர்கள் மட்டுமல்லாது, மொத்தகல்லூரியும் சிக்கிக் கொள்கிறது. இளைய தலைமுறைக்கு பிடிக்கும் வகையில், ஒரு கல்லூரியின் பின்னணியில் அத்தனை கதாபாத்திரங்களை கட்டமைத்து, கல்லூரிக்குள் நடக்கும்…
Read More
காளிதாஸ் ஜெயராமுடன் மீண்டும் நடிக்க யோசிக்க ! போர் திரைப்பட டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் அர்ஜூன் தாஸ்!

காளிதாஸ் ஜெயராமுடன் மீண்டும் நடிக்க யோசிக்க ! போர் திரைப்பட டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் அர்ஜூன் தாஸ்!

  சைத்தான், டேவிட், வாஷிர், ஷோலோ படங்களை இயக்கிய பிஜோய் நம்பியார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் இருவரும் நாயகர்களாக நடித்திருக்கும் திரைப்படம் “போர்”. டி.ஜே.பானு, சஞ்சனா நடராஜன், மெர்வின் ரொஸாரியோ மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இத்திரைப்படம் தமிழ் ஹிந்தி என இரட்டை மொழிகளில் வரும் மார்ச் 1 முதல் வெளியாகவிருக்கிறது. “போர்” திரைப்படத்தை T Series மற்றும் Roox Media இணைந்து தயாரித்திருக்கின்றனர். இப்படத்தின் டிரைலர் வெளியீடு இன்று சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர், படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள், போன்றோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் இந்நிகழ்வினில் இயக்குநர் பிஜோய் நம்பியார் பேசியதாவது, “போர்” திரைப்படம் ஒரு நேரிடையான தமிழ்ப்படம் எடுக்க வேண்டும் என்பதற்கான என்னுடைய மூன்றாவது முயற்சி ஆகும். ஷோலோ திரைப்படத்தையும் அந்த எண்ணத்தில் தான் உருவாக்கினேன். ஆனால் அதை தியேட்டர்களில் வெளியிட முடியாமல் போயிற்று. பந்த்…
Read More