விவசாயிகளின் வாழ்வியலை சொல்ல வரும் ‘பரமன்’

விவசாயிகளின் வாழ்வியலை சொல்ல வரும் ‘பரமன்’

இன்ஃபினிட் பிக்சர்ஸ் சார்பில் J சபரிஷ் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘பரமன்’ விவசாயிகளின் வாழ்வியலை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தில் ஜெய்பீம், பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்துள்ள சூப்பர் குட் சுப்பிரமணி கதையின் நாயகன் ‘பரமன்’ ஆக நடித்திருக்கிறார். பழ கருப்பையா வில்லனாக நடிக்க, இதுவரை பார்த்திராத ஒரு சீரியஸான கதாபாத்திரத்தில் வையாபுரி நடித்துள்ளார். மேலும் ஹலோ கந்தசாமி, விஜே அர்ச்சனா, மீசை ராஜேந்திரன், அசோக் தமிழ், சத்யா, ஜெயச்சந்திரன், கார்த்திக் பிரபு, சஞ்சய், மது உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமீம் அன்சாரி இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு சிபி சதாசிவம் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை இயக்குநர் சபரிஷே மேற்கொண்டுள்ளார். படத்தின் கதையை இதய நிலவன் எழுதியுள்ளார். பாடல்களை வேல்முருகன், முகேஷ் ஆகியோர் பாடியுள்ளனர். தனது முதல் படத்தில் கால் சென்டரில் நடக்கும் நிகழ்வுகளை வைத்து படமாக்கிய இயக்குநர் சபரிஷ், அதற்கு முற்றிலும் மாறாக இந்த ‘பரமன்’ படத்தில் விவசாயிகளின்…
Read More
தங்கரதம் பரமன் –  சௌந்தரராஜா ரொம்ப ஹேப்பி!

தங்கரதம் பரமன் – சௌந்தரராஜா ரொம்ப ஹேப்பி!

‘சுந்தரபாண்டியன்’ படத்தில் சசிக்குமாரின் நண்பராக அறிமுகம் ஆனவர் நடிகர் சௌந்தரராஜா. அதன்பின் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ஜிகர்தண்டா’ என வலம் வந்தவருக்கு, காமெடி மன்னன் கவுண்டமணியுடன் நடித்த, ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’, திரைப்படம் கதாநாயகன் புரமோஷன் கொடுத்தது. செளந்தரராஜா இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக நடித்திருக்கும் திரைப்படம், ‘ஒரு கனவு போல’ வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. அதற்கு முன்னால் சௌந்தர ராஜா வில்லனாக நடித்திருக்கும், ‘தங்க ரதம்’ திரைப்படம் வெளியாகி அவருக்கு பெரு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. இது பற்றி சௌந்தர ராஜா கூறுகையில், ‘இப்போது வெளியாகியுள்ள ‘தங்க ரதம்’ படத்தில் கதாநாயகியின் அண்ணனாக வில்லனாக நடித்திருக்கிறேன். படம் பார்த்த சினிமாத்துறை நண்பர்களும், பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறை நண்பர்களும் மற்றும் பொதுமக்களும் என் தோற்றம் மற்றும் நடிப்பு மிக சிறப்பாக இருக்கிறது என்று பாராட்டுகிறார்கள். மிக மிக சந்தோஷமாக இருக்கிறேன். ‘தங்க ரதம்’ இயக்குநர் பாலமுருகன் மற்றும் படக்குழுவிற்கு என் நன்றி. என்ஜினியரிங் படித்த நான் வெளிநாட்டு வேலைகளை விட்டு விட்டுத்தான் சினிமாவிற்கு வந்தேன். அதனால் எந்த இமேஜும் வைத்துக்கொள்ளாமல்…
Read More