13
Sep
கோலிவுட்டோ, பாலிவுட்டோ எல்லா சினிமா உலகிலும் எம்புட்டோ வாரிசு நடிகர்கள் இருந்தாலும் ஒரு சிலர் மாத்திரமே தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்கள் மனசில் நீங்கா இடம் பிடிச்சிருக்காய்ங்க. அவர்களில் முக்கியமான நடிகர் நவரச நாயகன் கார்த்திக். நடிகர் முத்துராமனின் மகனாக தமிழ் சினிமாவில் அறியப்பட்டாலும் பிற்காலத்தில் தனது தனித்துவமான நடிப்பால் மக்கள் மத்தியில் சிறந்த நடிகர் என்று பெயரெடுத்தவர். துறுதுறு சிட்டி பாய், கிராமத்து இளைஞன், அப்பாவி, சீரியஸ் கேரக்டர், காமெடி ஹீரோ என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் தனது நடை, உடை, பாவனை, தோரணை என அனைத்தையும் தனது நடிப்பில் வெளிப்படுத்தக்கூடிய அசாத்திய திறமை கொண்ட நடிகரிவர் இதுவே இவரது வெற்றிக்கு சான்று. கொஞ்சூண்டு விரிவா சொல்றதானா முத்திரை என்பது சினிமாவில் மிக எளிதாகச் செஞ்சிடும் காரியம். இரண்டு மூன்று படங்களிலேயே ‘இந்த நடிகர் இப்படி நடிப்பதற்கானவர்’ அப்படீன்னு முத்திரை குத்திப்புடுவாய்ங்க ரசிகர்கள். ஆனால், அவரை ‘அமுல்பேபி’ என்று கொண்டாடிக்…