17
Nov
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான பாலாஜி முருகதாஸ் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக கருமேகங்கள் கலைகின்றன படத்தில் நடித்த மஹானா சஞ்சீவி நடித்திருக்கிறார். வில்லனாக "மைம்" கோபி நடிக்க, முதன்மையான கதாபாத்திரத்தில் ரெடின் கிங்ஸ்லீ, காயத்ரி ரேமா நடித்திருக்கின்றனர்.இவர்களுடன் சிங்கம் புலி, சரவண சுப்பையா, தீபா, வையாபுரி, வாசு விக்ரம், பயில்வான் ரங்கநாதன், போண்டா மணி, மீசை ராஜேந்திரன், கிரேன் மனோகர், ரஞ்சன், திலீபன், பிரபாகரன், யோகி ராமசாமி, வடிவேல் பீட்டர் உள்ளிட்ட மேலும் பல பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். முக்கியமாக இந்த படத்தில் 40 குழந்தைகளும் நடித்திருக்கிறார்கள். இசையமைப்பாளராக தேனிசைத்தென்றல் தேவா, ஒளிப்பதிவாளராக கார்த்திக் ராஜா, எடிட்டராக ராஜா முகமது, நடன இயக்குநராக நோபல், சண்டை பயிற்சியாளராக இடிமின்னல் இளங்கோ என பிரபலமானவர்களே பணியாற்றி உள்ளனர். ஏற்கனவே 'வா வரலாம் வா' படத்தின் First Look வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், வரும் டிசம்பர் மாதம் 01 ஆம் தேதி "வா வரலாம்…