ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் இந்தி படம் ‘மாணிக்’

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் இந்தி படம் ‘மாணிக்’

  இந்தியாவின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான எண்டேமால் ஷைன் இந்தியா எனும் நிறுவனம், நட்மெக் புரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்து தமிழ் மற்றும் இந்தி என இரண்டு மொழிகளில் தயாரிக்கும் ' மாணிக்' எனும் புதிய படத்தில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடிக்கிறார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை இரண்டு நிறுவனங்களும் இணைந்து வெளியிட்டிருக்கிறது. எண்டேமால் ஷைன் இந்தியா நிறுவனம், நட் மெக் புரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்து தங்களின் அடுத்த தயாரிப்பாக 'மாணிக்' என்ற திரைப்படத்தை தயாரிக்கிறது. இந்தி மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளில், உளவியல் திரில்லர் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தில் ‘வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்’, ‘திட்டம் இரண்டு’, ‘கனா’, ‘வடசென்னை’ போன்ற தமிழ் படங்களிலும், ‘சுழல்’ எனும் வலைதள தொடரிலும், ‘டாடி’ எனும் இந்தி படத்திலும் நடித்த சிறந்த நடிகைக்காக விருது பெற்ற நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக முதன்மையான…
Read More