ஒரு காட்சிக்கு ஆன செலவு மொத்த படத்தின் பட்ஜெட்டைத் தாண்டியது! G2 படத்தை பற்றி தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால்!

ஒரு காட்சிக்கு ஆன செலவு மொத்த படத்தின் பட்ஜெட்டைத் தாண்டியது! G2 படத்தை பற்றி தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால்!

“கூடசாரி” படத்தின் ஆறாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், நட்சத்திர நடிகர் அடிவி சேஷ், தனது டிவிட்டர் பக்கம் வழியே, பல புது அறிவிப்புகளை வெளியிட்டு, ரசிகர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். முதல் பாகத்தின் புகழைக் கட்டிக்காக்கும் வகையில் , G2 பல புதுமையான அம்சங்களுடன் உயர்தரத்தில் உருவாகிறது. 40% படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், தயாரிப்பாளர்கள் படத்திலிருந்து ஆறு ஸ்டைலான அதிரடி தருணங்களை வெளியிட்டுள்ளனர். இது படத்தின் சர்வதேச தர உருவாக்கத்தையும் மற்றும் நுட்பத்தையும் முன்னிலைப்படுத்துகிறது. G2 இன் இந்த தருணங்கள் இந்தியாவில் மட்டுமல்ல, உலகளாவிய தளத்திலும் தனித்து நிற்கும், ஒரு ஸ்பை த்ரில்லரை வழங்குவதற்கான அர்ப்பணிப்பு மிக்க முயற்சியைக் காட்டுவதாக அமைந்துள்ளது. இப்படம் 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் பிரமாண்டமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. G2 அனைத்து முக்கிய இந்திய மொழிகளிலும், பான் இந்திய வெளியீடாக வெளியாகவுள்ளது. இப்படத்தை வினய் குமார் சிரிகினிடி இயக்குவதோடு, முன்னணி நாயகன் அடிவி…
Read More
நடிகர் அடிவி சேஷ் நடிக்கும் ‘G2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

நடிகர் அடிவி சேஷ் நடிக்கும் ‘G2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

  தெலுங்கு திரையுலகின் முன்னணி இளம் நட்சத்திர நடிகர்களில் ஒருவரான அடிவி சேஷ் நடிக்கும் 'G2'எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. பான் இந்திய திரைப்படமாக தயாராகவிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்ட பார்வையும் வெளியிடப்பட்டிருக்கிறது. 'HIT 2' எனும் திரைப்படத்தின் மூலம் இரட்டை ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்து நம்பிக்கைக்குரிய இளம் நட்சத்திர நடிகராக உயர்ந்திருக்கிறார் நடிகர் அடிவி சேஷ். இவரது நடிப்பில் தயாராகும் புதிய படத்திற்கு 'G2' ( கூடாச்சாரி 2) என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. கூடாச்சாரி படத்தின் முதல் பாகம், இந்திய அளவில் நடைபெறும் திரைக்கதையாக அமைக்கப்பட்டிருந்தது. தற்போது இதன் இரண்டாவது பாகத்தின் கதை சர்வதேச அளவில் நடைபெறுவதாக உருவாக்கப்படுகிறது. இதற்கான கதையை நடிகர் அடிவி சேஷ் எழுதுகிறார். இவரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'மேஜர்' எனும் படத்திற்கு படத்தொகுப்பாளராக பணியாற்றிய வினய் குமார் சிரிகீனீடி, இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.…
Read More