தனது வாழ்க்கை வரலாறு படமான ‘800’ படத்தை பற்றி முத்தையா முரளிதரன் பேசியுள்ளார்!

தனது வாழ்க்கை வரலாறு படமான ‘800’ படத்தை பற்றி முத்தையா முரளிதரன் பேசியுள்ளார்!

  சர்வதேச கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தனது விளையாட்டுத் திறமையால் மட்டுமல்லாது ஒரு மனிதனாகவும் பில்லியன் கணக்கானவர்களை ஊக்கப்படுத்தியுள்ளார். அவரது பயணம் தடைக்கற்களைத் தாண்டி வந்த கடின உழைப்பு, சவால்களை சமாளிப்பது மற்றும் தடைகளை எதிர்த்துப் போராடுவது, அதன் மூலம் கிடைத்த நிலையான ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்புடன் கனவுகளை நிறைவேற்றுவது என அவரின் வெற்றி பல நபர்களை ஊக்கப்படுத்தியுள்ளது. தற்போது எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கிய ’800’ மூலம் அவரது இன்ஸ்பையரிங்கான வாழ்க்கை கதை படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தைப் பற்றி முத்தையா முரளிதரன் பகிர்ந்து கொண்டதாவது, “இது எனது வாழ்க்கையின் உணர்ச்சிகரமான கட்டம். இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. எனது வாழ்க்கைக் கதையைச் சொல்வதை விட, இளைய தலைமுறையினருக்கு முன்னால் இருக்கும் சவால்கள் மற்றும் போராட்டங்களை வெளிக்கொணரும் வகையில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை உருவாக்கியதற்காக மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் படத்தை வழங்கும் ஸ்ரீதேவி…
Read More
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘800’ படத்தின் அறிவிப்பு!

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘800’ படத்தின் அறிவிப்பு!

  இலங்கையின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன், சர்வதேச கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய தனித்துவமான கிரிக்கெட் சாதனையைப் படைத்துள்ளார். அவருக்குப் பிறகு வேறு எந்த கிரிக்கெட் வீரரும் இந்த சாதனையை முறியடிக்கவில்லை. தற்போது இவரது வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து '800' என்ற படம் தயாராகி வருகிறது. மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கியுள்ளார். இதில் 'ஸ்லம்டாக் மில்லியனர்' புகழ் மதுர் மிட்டல் மற்றும் மஹிமா நம்பியார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். புக்கர் பரிசை வென்ற ஷெஹான் கருணாதிலக்க இப்படத்தில் இணை கதாசிரியராக பணியாற்றியுள்ளார். ஸ்ரீதேவி மூவீஸின் தயாரிப்பாளரான சிவலெங்க கிருஷ்ண பிரசாத் '800' படத்தின் அகில இந்திய திரையரங்கு உரிமையைப் பெற்றுள்ளார். '800' முதலில் ஒரிஜினல் வெர்ஷன் தமிழில் படமாக்கப்பட்டது. இப்போது அது தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றிலும் வெளியிடப்படுகிறது. இலங்கை, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கொச்சின், சண்டிகர்…
Read More
கிராமத்து கிரிக்கெட் பின்னணியிலான கதை ‘திடல்’

கிராமத்து கிரிக்கெட் பின்னணியிலான கதை ‘திடல்’

கிராமத்தில் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள் பற்றிய கதையாக உருவாகி இருக்கும்  'திடல் 'படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை 'ராட்சசன்' ராம்குமார் வெளியிட்டார். இப்படத்திற்குத் திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் எஸ். கே. எஸ். கார்த்திக் கண்ணன். இவர் இயக்குநர் முகி மூர்த்தி, முத்து செல்வன், செல்வா போன்றவர்களிடம் உதவி இயக்குநராக இருந்தவர். மேலும் பல படங்களில் பணியாற்றியவர். ஏராளமான குறும்படங்கள் எடுத்தவர். ஒரு ஷார்ட் பிலிம் மேக்கராக பரவலாக அறியப்பட்ட இவர், தனது குறும்படங்களுக்காக 7 விருதுகளை பெற்றிருப்பவர். ஆரம்பத்தில் குரிப்பிட்டது போ இந்தத் 'திடல்' , ஒரு கிராமத்தில் கிரிக்கெட் விளையாடும் வாலிபர்கள் பற்றிய கதை . முதல் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்த கிராமத்துச் சிறுவர்கள் வளர்ந்து கிரிக்கெட்டில் ஆர்வமுள்ளவர்கள். ஊரில் உள்ள சிலர் அவங்களை இங்கு விளையாடக்கூடாது என்று அசிங்கம் படுத்து கிறார்கள். அவர்கள் பக்கத்து ஊர்களுக்குப் போய் விளையாட. அங்கும் புறக்கணிக்கப் படுகிறார்கள்.…
Read More
சர்ச்சைகளைச் சட்டை செய்யாமல் முரளிதரனாக மாறும் விஜய் சேதுபதி!

சர்ச்சைகளைச் சட்டை செய்யாமல் முரளிதரனாக மாறும் விஜய் சேதுபதி!

ஒரு சினிமா படம் குறித்த அறிவிப்பே உலகளவில் எக்கச்சக்க எதிர்பார்ப்பை உருவாக்குவது ரொம்ப அபூர்வம். சர்வதேச அளவில் தலைசிறந்த ஆளுமைகளின் பயோபிக் சிலபல் அப்படியொரு எதிர்பார்ப்பை உருவாக்க்கி உள்ளது. அப்படித்தான் இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர், மிகப்பெரிய ஆளுமையான முத்தையா முரளிதரன் பயோபிக்கை அறிவிப்பதில் மூவி ட்ரைன் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் டார் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் பெருமிதம் கொள்கிறது. முன்னொரு காலத்தில் தமிழகத்தில் இருந்து ஆங்கிலேயர்களால் தேயிலை தோட்டத்தில் வேலை பார்க்க அழைத்து செல்லபட்டு அங்கு தினக்கூலிகளாக வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு குடும்பம் மிகவும் ஏழ்மையிலிருந்து தொடங்கி படிப்படியாக வளர்கிறது. அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் கஷ்டப்பட்டுப் படித்து, வளரும் போது கிரிக்கெட் மீது ஆர்வம் கொள்கிறான். அப்போது அவருக்கு சமூகத்திலிருந்து ஏற்படும் இன்னல்களை வெற்றிகரமாக கடந்து இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்கிறார். அதற்குப் பிறகு அவரை வளரவிடாமல் தடுக்க தடைகள் வரும் போது, ஒவ்வொரு தடையையும்…
Read More