நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் நடிப்பில் வெளியாகவுள்ள ‘தி கோட் லைஃப்’ படத்தின் இரண்டாம் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு!

நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் நடிப்பில் வெளியாகவுள்ள ‘தி கோட் லைஃப்’ படத்தின் இரண்டாம் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு!

  தேசிய விருது பெற்ற இயக்குநர் பிளெஸி இயக்கத்தில், நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் நடிப்பில் வெளியாகவுள்ள 'தி கோட் லைஃப்' படத்தின் முதல் போஸ்டரை அவரது 'சலார்' படத்தின் கோ-ஸ்டார் பிரபாஸ் வெளியிட்டது பார்வையாளர்களுக்கு விருந்தாக அமைந்தது. உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள மிகப்பெரிய சர்வைவல் அட்வென்சரான இந்தப் படத்தின் இரண்டாவது பார்வை போஸ்டரை பாலிவுட் சூப்பர் ஸ்டார் ரன்வீர் சிங் இன்று தனது சமூக ஊடக தளத்தில் வெளியிட்டார். படத்தின் போஸ்டர்களில் நடிகர் பிரித்விராஜின் மாறுபட்ட தோற்றங்கள், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக 'தி கோட் லைஃப்'பை மாற்றியுள்ளது. இப்போது வெளியாகியுள்ள படத்தின் இரண்டாவது தோற்றமும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் ஆர்வத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. விஷுவல் ரொமான்ஸ் தயாரித்துள்ள ’தி கோட் லைஃப்’ படத்தில், ஹாலிவுட் நடிகர் ஜிம்மி ஜீன் லூயிஸ், இந்திய நடிகர்களான அமலா பால் மற்றும் கே.ஆர். கோகுல், பிரபல அரபு நடிகர்களான…
Read More