13
Jan
தமிழின் முதல் முழுமையான ஏலியன் திரைப்படம் சிறப்பாக வந்திருக்கிறதா ? இன்று நேற்று நாளை படத்தின் இயக்குநர் ரவிக்குமாருடன் சிவகார்த்திகேயன் ஜோடி சேர்ந்த படம். கிட்டதட்ட 6 வருடங்களுக்கு பிறகு திரைக்கு வந்திருக்கிறது. இந்தப் படம் பூஜை போட்ட போதே, இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் இந்த திரைப்படம் பூர்த்தி செய்து இருக்கிறதா? பொங்கலுக்கு குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக அடையாளம் காட்டப்படும் திரைப்படம் அயலான் அந்த அளவு ஒர்த்தாக இருக்கிறதா ? சயின்ஸ் பிக்சன் ஜானரில் தமிழ் படங்கள் செய்யாத ஒரு சாதனையை செய்த படம் ‘இன்று நேற்று நாளை’. அடிமட்ட ரசிகனுக்கும் புரியும் வண்ணம் திரைக்கதையில், அறிவியலை நுழைக்து, ஒரு டைம் ட்ராவல் படத்தை அனைவரையும் ரசிக்கும் வண்ணம் தந்த ரவிக்குமார், இந்த முறை முன்னணி நடிகரான சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஏலியன் படத்தை தந்துள்ளார். இந்த திரைப்படம் முழுக்க குழந்தைகளுக்காகவும், குடும்ப பார்வையாளர்களுக்கும்…