நீட் ‘அனிதா’ வீட்டுக்கு போய்  ஆறுதல் கூறிய நடிகர் விஜய்!

நீட் ‘அனிதா’ வீட்டுக்கு போய் ஆறுதல் கூறிய நடிகர் விஜய்!

அரியலூர் மாவட்டம் குழுமூரை சேர்ந்த மாணவி அனிதா, நீட் தேர்வால் டாக்டருக்கு படிக்க முடியாததால் கடந்த 1-ந்தேதி தற்கொலை செய்து கொண்டார். ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரி மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், அரியலூர் மாணவி அனிதா தற்கொலைக்குப்பின் இந்த போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. பள்ளி-கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினரும் இந்த போராட்டக்களத்தில் குதித்து உள்ளனர். நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், அனிதாவின் மரணத்திற்கு நீதி கோரியும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் இன்று காலை அரியலூர் குழுமூரில் உள்ள மாணவி அனிதா வீட்டிற்கு சென்றார். அங்கு அனிதாவின் தந்தை  சண்முகம் மற்றும் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் வீட்டில் தரையில் அமர்ந்தபடி சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது எந்த உதவிகள் வேண்டுமானாலும் செய்து தருவதாக அனிதாவின் குடும்பத்தினரிடம் தெரிவித்தார். பின்னர்…
Read More
அரியலூர் அனிதா மறைவுக்கு திரையுலகத்தினரின் இரங்கல் செய்தி..!

அரியலூர் அனிதா மறைவுக்கு திரையுலகத்தினரின் இரங்கல் செய்தி..!

நீட் தேர்வை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த மாணவி அனிதா (17) இன்று தன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 12ம் வகுப்புத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றும், நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் அவருக்கு மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைக்கவில்லை. இந்த வருத்தத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் மாணவி அனிதா மறைவுக்கு தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். . ரஜினிகாந்த் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘ அனிதாவிற்கு நிகழ்ந்தது மிகவும் துரதிருஷ்டவசமானது. என் மனம் மிகுந்த வேதனை அடைந்துள்ளது. இப்படி ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பு அனிதா பட்ட வலியையும், வேதனையும் என்னால் உணர முடிகிறது. அவருடைய குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கல்” என்று கூறியுள்ளார். கமல்ஹாசன் , “மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டது வேதனை அளிக்கிறது. நீட் தேர்வுக்கு எதிராக வாதாட வேண்டியவர்கள் எல்லாம், பேரம் பேசி…
Read More