பேத்தி கணவர் நடித்த படத்தை வெளியிட மறுத்த ஏவிஎம் சரவணன்

பேத்தி கணவர் நடித்த படத்தை வெளியிட மறுத்த ஏவிஎம் சரவணன்

ஏவிஎம் சரவணனின் பேத்தியும், எம்.எஸ்.குகனின் மகளுமான அபர்ணாவின் கணவர் ஆர்யன் ஷாம் கதாநாயகனாக நடிக்கும் முதல் படம் ‘அந்தநாள்’. இயக்குநர் வி.வி இயக்கியிருக்கும் இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. அண்மையில் படத்தைப் பார்த்த தணிக்கைக் குழு, படத்தில் பல காட்சிகளை மாற்றும்படிக் கூறியிருக்கிறது.அப்படிச் செய்தால் படத்தின் கதை சிதைந்து விடும் என்பதால் மேல்முறையீட்டுக்குச் சென்று ஒரு சில காட்சிகளை தெளிவற்றமுறையில் காட்ட ஒப்புக்கொண்டு தணிக்கைச் சான்றிதழ் பெற்றுள்ளனர். அதனால் விரைவில் படம் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் நாயகன் ஆர்யன் ஷாமைச் சந்தித்தோம். படம் குறித்து அவர் கூறியதாவது… நரபலியை மையப்படுத்தி அந்தநாள் படத்தை எடுத்திருக்கிறோம். தமிழ்த் திரையுலகம் மட்டுமல்ல, ஹாலிவுட் படங்களில் கூட இதுவரை நரபலியை மையப்படுத்திய படங்கள் வந்ததில்லை. நாங்கள் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கி காட்சிகளையும் மிரட்டலாகப் படமாக்கியுள்ளோம். படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர், இந்திய அரசியலமைப்பில் நரபலி என்பதற்கு அனுமதியில்லை என்பதால்,…
Read More