22
Sep
ஐமா ' திரைப்பட விமர்சனம் நடிப்பு: யூனஸ் ,எல்வின் ஜூலியட், அகில் பிரபாகரன் , ஷாஜி, ஷீரா, மேகா மாலு, மனோகரன், வில்லனாக தயாரிப்பாளர் சண்முகம் ராமசாமி தமிழ் எக்ஸாடிக் பிலிம்ஸ் (Tamil Exotic Films )நிறுவனம் சார்பில் சண்முகம் ராமசாமி ,'ஐமா' திரைப்படத்தைத் தயாரித்துள்ளார் இசை: கே ஆர்.ராகுல் ஒளிப்பதிவு: விஷ்ணு கண்ணன் எடிட்டிங் அருண் ராகவ், இயக்கம்: ராகுல் ஆர்.கிருஷ்ணா ஆதாம் (யூன்ஸ்) தன் தாயின் உடல் நிலை பாதித்ததால் அவரை மருத்துவமனையில் சேர்க்கிறான். அதேபோல் விபத்தில் சிக்கிய மரியா (எல்வின் ஜூலியட் ) அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்கிறாள். ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரையும் கடத்தி ரகசிய இடத்தில் அடைக்கின்றனர். கை கால் கட்டப்பட்டு கிடக்கும் அவர்கள் ஒரு வழியாக அதிலி ருந்து மீண்டு அந்த இடத்திலிருந்து தப்பிக்க முயல்கின்றனர். ஆனால் இவர்கள் இருவரையும் கடத்தி வரும் பேர்விழி ரகசிய திட்டம் தீட்டியிருக்கிறான். அதற்காக இருவரையும் சித்ரவதை…