இயக்குநர் பாக்யராஜ் மாதிரி அடல்ட் படம் எடுத்தால் நான் நடிக்க தயார் – ‘ 3.6.9’ விழாவில் ஆரி பேச்சு !

இயக்குநர் பாக்யராஜ் மாதிரி அடல்ட் படம் எடுத்தால் நான் நடிக்க தயார் – ‘ 3.6.9’ விழாவில் ஆரி பேச்சு !

பிஜிஎஸ் சரவணகுமார் தயார்ப்பில் இயக்குநர் சிவ மாதவ் இயக்கத்தில்,  21  வருடங்களுக்கு பிறகு திரைக்கதை மன்னன் பாக்யராஜ் நாயகனாக நடித்துள்ள திரைப்படம்  '3.6.9'. உலக கின்னஸ் சாதனை படைக்கும் விதமாக,  நேரடியாக 81 நிமிடங்களில் படமாக்கப்பட்டுள்ளது இப்படம்.  24 கேமராக்களில் ஒளிப்பதிவு செய்ய, 450 தொழில் நுட்ப கலைஞர்கள் பங்கேற்க, 75 க்குமேற்பட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகியுள்ளது.  பரபரப்பான ஒரு சயின்ஸ் பிக்சன் திரில்லராக வெளியான இப்படத்தின் முன்னோட்ட வெளியீடு,  பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் படக்குழுவினர் கலந்துகொள்ள இனிதே நடைபெற்றது. தயாரிப்பாளர் பி ஜி எஸ் சரவணகுமார் பேசியதாவது… எங்களுக்கு ஒரு ஐடியாவாக தோன்றியதை செய்யலாம் என முடிவெடுத்து திட்டமிட்டோம்.  பாக்யாராஜ் சாரிடம் சொன்ன போது அவர் வழிகாட்டினார்,  எல்லாம் நல்லபடியாக நடந்தது,  உங்களுக்கு படம் பிடிக்குமென நம்புகிறோம் நன்றி. நடிகர் ஆரி பேசியதாவது… இந்த படத்திற்கு வருமுன் படத்தை பற்றிய விசயங்களை கேட்டேன். சயின்ஸ் பிக்சன் படம் என்றார்கள்.…
Read More