27
Jun
அண்மையில் கன்னடத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘யு-டர்ன்’. இதில் ஹீரோயினாக நடித்தவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். இவர் காற்று வெளியிடை படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரைப்படத்திற்கு அறிமுகமானார். இப்போது ’இவன் தந்திரன்’ படத்தில் கெளதம் கார்த்திக் ஜோடியாக நடித்துள்ளார். ஆர்.கண்ணன் இயக்கியுள்ள இந்தப் படம் வரும் 30-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இப்படம்பற்றி, ஷ்ரத்தா சமீபத்தில் கொடுத்த பேட்டியின் போது, “யூ – டார்ன் திரைப்படம் வெளியான அந்த நேரத்தில் இயக்குநர் கண்ணன் அவர்களின் துணை இயக்குநர் ரஜத் என்னை இவன் தந்திரன் படத்தில் நடிப்பது குறித்து தொடர்பு கொண்டு பேசினார். என்னை பொறுத்தவரை ஒவ்வொரு முறை என்னை திரையில் ரசிகர்கள் பார்க்கும் போதும் யூ- டார்னில் நடித்த பெண் தானே இவர் என்று யாரும் கண்டுபிடிக்கக்கூடிய கதாபாத்திரங்களில் நடிக்க கூடாது என்று நான் உறுதியாக உள்ளேன். இவன் தந்திரனில் நான் ஏற்று நடித்துள்ள ஆஷா கதாபாத்திரம் அப்படி ஒரு வித்யாசமான…