விக்ரம் ‘சீயான்’ ஆக மாற உதவிய சேது படத்தின் போராட்டக் கதை!

விக்ரம் ‘சீயான்’ ஆக மாற உதவிய சேது படத்தின் போராட்டக் கதை!

விக்ரம் நடிச்ச சேது இதே டிசம்பர் 10ல்தான் ரிலீஸாச்சு அதை ஒட்டி நம்ம கட்டிங் கண்ணையா அனுப்பி இருக்கும் சேது பட தயாரிப்பின் ஃபிளாஷ் பேக் ஸ்டோரி சேது 1999 ஆம் ஆண்டு வெளியான தமிழ் மொழி காதல் நாடகத் திரைப்படமாகும், நீண்ட காலமாக திரையுலகில் தன்னை நிரூபிக்க கடினமாக போராடிக் கொண்டிருந்த விக்ரமுக்கு தமிழ் சினிமாவுலகில் ஒரு தனி அடையாளத்தைக் பெற்றுத் தந்த திரைப் படம் இந்த சேது.அதேபோல் இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்த பாலா இயக்கிய முதல் திரைப்படமும் சேது தான். தன்னை எந்தளவுக்கும் வருத்திக்கொள்ளக் கூடிய இன்னொரு நடிகனாகவே இருந்த விக்ரம் தனது சினிமா வாழ்க்கையின் முதல் வெற்றியை ருசித்த படமிது . இந்த ஒரு வெற்றிக்காக விக்ரமின் காத்திருப்பு என்பது பெரிய பகீரத பிராயத்தனம். தன்னுடைய முதல் படத்தில் இருந்து பல தோல்விகளைச் சந்தித்த விக்ரம், கடைசி வாய்ப்பாக தன் கையில் எடுத்தது ‘சேது’ படத்தைதான்…!…
Read More
விக்ரம் மகளை தன் கொள்ளு பேரணுக்கு மணம் செய்து வைத்தார் கருணாநிதி!

விக்ரம் மகளை தன் கொள்ளு பேரணுக்கு மணம் செய்து வைத்தார் கருணாநிதி!

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து- சிவகாம சுந்தரியின் மகள் வழிப்பேரனும், கெவின்கேர் நிறுவனத்தலைவர் சி.கே. ரங்கநாதன்-தேன்மொழி தம்பதியின் மகனுமான மனோரஞ்சித்துக்கும், நடிகர் விக்ரம்- சைலஜா தம்பதியின் மகள் அக்‌ஷிதாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களின் திருமணம் சென்னை கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் வீட்டில் இன்று காலை நடைபெற்றது. திருமணத்தில் கருணாநிதி மற்றும் நடிகர் விக்ரம் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர். அரசியல் கட்சியினர் யாரும் பங்கேற்கவில்லை. இந்நிகழ்வையொட்டி காலை 9.50 மணியளவில் மணமகள் அக்‌ஷிதாவை கோபாலபுரம் இல்லத்துக்கு நடிகர் விக்ரம் காரில் அழைத்து வந்தார். மணமகளுக்கு மாலை அணிவித்து உள்ளே அழைத்து சென்றனர். காலை 10 மணியளவில் மணமகன் மனோரஞ்சித் வந்தார். அவருக்கு மாலை அணிவித்து வரவேற்று அழைத்து சென்றனர். மணமக்கள் கருணாநிதியின் காலில் விழுந்து ஆசி பெற்றனர். 10.25 மணிக்கு கெட்டி மேளம் முழங்க தமிழ் முறைப்படி கருணாநிதி திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். திருமண…
Read More
இது ஒரு லாலாலா படம்! – விக்ரம் வேதா’ குறித்து விஜய் சேதுபதி

இது ஒரு லாலாலா படம்! – விக்ரம் வேதா’ குறித்து விஜய் சேதுபதி

 மாதவன், விஜய் சேதுபதி, ஷரதா ஸ்ரீநாத், வரலெட்சுமி, கதிர் உள்ளிட்ட பலர் நடிப்பில் புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் உ ருவாகியிருக்கும் படம் 'விக்ரம் வேதா'. ஜூலை 7-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்சியில் விஜய் சேதுபதி பேசிய போது "நடிப்பில் சுதந்திரத்தை முழுமையாக உணர்ந்த இடம் 'விக்ரம் வேதா' படப்பிடிப்பு தளம் தான். எனக்கு இப்படத்தில் பங்குள்ளது என நினைத்து முழுமையாக பணி யாற்றியுள்ளேன். 2014-ம் ஆண்டு இப்படத்தின் கதையைக் கேட்டேன். தற்போது படமாக பார்க்கும் போது பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கிறது. இந்தப் படத்தின் மொத்த கனவையும் நனவாக்கியது ஷசிகாந்த் சார் தான். ஏனென்றால் அவருடைய ரசனை மிகவும் பெரியது. ஒரு தயாரிப்பாளருக்கு படத்தின் ரசனை மிகவும் முக்கியம். அது ஷசிகாந்திடம் நிறைய உள்ளது. வரலெட்சுமி, கதிர் மற்றும் விவேக் உள்ளிட்ட யாருமே ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல. மாதவனுக்கும் எனக்கும் எது முதல் காட்சியோ, அது தான்…
Read More