18
Sep
கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேசன்ஸ் வழங்க மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பில் மிக பிரமாண்டமாக தயாராகும் படம் “ ஸ்கெட்ச் “. விக்ரம் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார். மற்றும் சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன், மதுமிதா, விஷ்வாந்த், பாபுராஜா, வினோத், வேலராமமூர்த்தி, சாரிகா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடத்தில் பிரியங்கா நடிக்கிறார். படம் பற்றி கூறிய இயக்குனர் விஜய் சந்தர்....”வட சென்னையை பின்னணியாக கொண்டு உருவாகும் இந்த படம் புது மாதிரியான ஒரு உணர்வை ஏற்படுத்தும். வட சென்னையில் பாமரர்கள், ஏழைகள் மட்டுமல்ல, படித்த டாக்டர்கள், வக்கீல்கள் என்று உயர்மட்ட மக்களும் இருக்கிறார்கள் என்கிற ஸ்டைலிஷ் படமாக ‘ஸ்கெட்ச்‘ உருவாகி வருகிறது. பரபரப்பான ஆக்ஷன் படமாகவும் ‘ஸ்கெட்ச்’ தயாராகி வருகிறது” என்றார் இப் படத்திற்காக சென்னையில் மிக பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு “ அச்சி புச்சி ஸ்கெட்சு “ என்ற பாடல்…