31
Jul
புரொடியூசர்கள் மற்றும் ஃபெப்சி தொழிலாளரகள் மோதல் போக்கால் படு சூடாகி உள்ள கோலிவுட்டை மேலும் சூடாக்குவது போல் ஆகஸ்ட் 11-ம் தேதி 'தரமணி' வெளியீடு என்று படக்குழு விளம்பரப்படுத்தி வருகிறது. அதிலும் இப்படத்திற்கு தணிக்கை அதிகாரிகள் 'ஏ' சான்றிதழ் அளித்துள்ளார்கள். இதனை மையமாக வைத்தே படக்குழு தொடர்ச்சியாக போஸ்டர்கள் மற்றும் டீஸர் வழியாக சாடியுள்ளது. இதனிடையே இப்படத்தின் தணிக்கையில் என்ன நடந்தது என்பது குறித்து இயக்குநர் ராம் விளக்கிய போது, “இன்றைய நவீன இளைஞனும், யுவதியும் காதலை எப்படி பார்க்கிறார்கள், காதலிக்கிறார்கள், காதலை எப்படி புரிந்து கொள்கிறார்கள், காமத்தை எப்படி புரிந்து கொள்கிறார்கள் என்பது தான் படத்தின் கதை. இன்றைய நவீன யுவதி பற்றிய கதை என்பதால், மதுகுடிப்பவராக இருக்கும்போது அதைக் காட்டியுள்ளேன். தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் தராவிட்டாலும் கேட்டு வாங்கியிருப்பேன். காமத்தைப் பற்றியும், காதலைப் பற்றியும் 13 வயது நிரம்பாதவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. இது இளைஞர்களுக்கான…