ரஜினிகாந்துக்கு முதலில் மன்றம் ஆரம்பித்த மதுரை முத்துமணி காலமானார்!

ரஜினிகாந்துக்கு முதலில் மன்றம் ஆரம்பித்த மதுரை முத்துமணி காலமானார்!

'அபூர்வ ராகங்கள்' படத்தில் ரஜினி அறிமுகமானபோதே, அவருக்கு, 'கவர்ச்சி வில்லன் ரஜினி ரசிகர் மன்றம்' தொடங்கிய மதுரை முத்துமணி காலமானார். ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் பாண்ட் சீன் கேனரி முதல் நடிகர் முரளி, ஸ்ரீகாந்த் போன்ற தமிழ் நடிகர்கள் வரையில் பெரும்பாலான நட்சத்திரங்களுக்குத் தமிழகத்தின் முதல் ரசிகர் மன்றத்தைத் தொடங்கிய ஊர் மதுரை. ரஜினிகாந்த்துக்கும் கூட முதல் ரசிகர் மன்றம் மதுரையில்தான் தொடங்கப்பட்டது. இன்று அது மிகப்பெரிய ஆலமரமாகி விட்டாலும், முதல் மன்றத்தைத் தொடங்கிய முத்துமணி மீது ரஜினிக்கு எப்போதுமே தனிப் ப்ரியம் உண்டு. மன்றத்தைத் தொடங்கிய முத்துமணியிடம் முன்பொரு முறை பேசிய போது. “மதுரை அலங்கார் தியேட்டர்ல 1975ல ‘அபூர்வராகங்கள்’ படம் ரிலீஸ் ஆச்சு. அதில் ரஜினி மொத்தமே 20 நிமிசங்கதான் வருவார். அதுவும் ப்ளட் கேன்சர் பேஷண்டா, சாவோடு போராடும் ரோல்ம். ஆனால் அவர் கேட்டைத் திறந்துகிட்டு அறிமுகமாகும் அந்த ஸ்டைலும், அவரது பார்வையும் அப்பவே என்னை என்னவோ…
Read More