15
Sep
அன்னபூரணி மூவீஸ் சார்பில் அருணாச்சலம் தயாரித்து இருக்கும் படம் போலீஸ் ராஜ்யம். பிருத்விராஜ், ஓவியா, ஜெமினி கிரண், கலாபவன் மணி, சத்யா, ஐஸ்வர்யா, ஜெகதீஷ், சீமா, தேவா,பாபுராஜ் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தில் உளவுத்துறை அதிகாரியாக பிருத்விராஜ் நடித்திருக்கிறார். களவாணி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமாகி பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களின் கனவு கன்னி ஆன ஓவியா போலீஸ் ராஜ்யம் படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார்.இயற்கை வளம் கொஞ்சும் கிராமத்தில் அப்பா அம்மா குழந்தைகள் என மகிழ்ச்சிகரமாக வாழ்ந்து வரும் குடும்பத்தில் தொடர்ந்து கொலைகள் நிகழ்கிறது. ஏன் இந்த கொலை குடும்பத்தில் மட்டுமல்ல அந்த ஊரில் பல்வேறு அசம்பாவிதங்கள் அரங்கேறுகின்றன. உள்ளூர் காவல் துறையால் துப்புத் துலக்க முடியாமல் தடுமாற தொடர் கொலைகள் நிகழ காரணம் என்ன குற்றவாளி யார் என்பதை கண்டுபிடிக்கும் சிறப்பு புலனாய்வு அதிகாரியாக பிருத்விராஜ் அரசால் நியமிக்கப்படுகிறார். தொடர் கொலைக்கான காரணத்தையும், குற்றவாளியையும் கண்டுபிடித்து கொலைகாரனை பிருத்விராஜ்…