விக்ரம் வேதா கண்டிப்பாக பார்க்க வேண்டிய படைப்பு.

விக்ரம் வேதா கண்டிப்பாக பார்க்க வேண்டிய படைப்பு.

விக்ரமாதித்தன் வேதாளம் இதிகாசத்தை அட்டகாசமாக போலிஸ், ரௌடி கதையாக மாற்றியிருக்கிறார்கள். அந்த புதுமை தான் படத்தின் மிகப்பெரும்பலம். ஓரம்போ , குவாட்டர் கட்டிங் என்ற இரு படங்களுக்குப் பிறகு 7 வருட உழைப்பில் வந்திருக்கும் புஷ்கர் காய்த்திரியின் படம் விக்ரம் வேதா. படத்தின் ஒரு ஃபிரேம் கூட வீணாக்காமல் அத்தனை அழகாக திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். ஒரு படத்தின் பாதி வெற்றி அந்தப்படத்தின் நடிகர்கள் தேர்வில் இருக்கிறது. மாதவன், விஜய் சேதுபதி மட்டுமல்லாது படத்தில் வரும் ஒவ்வொரு சிறு கதாப்பாத்திரமும் அழகாக தேர்ந்தெடுத்து கையாளப்பட்டிருக்கிறது. தனக்கு சரியென்பதை துணிச்சலாக செய்யும் போலீஸ் அதிகாரி ஒரு ரௌடியை என்கவுண்டர் பண்ண அலைகிறார்கள். ரௌடி கூட்டதின் ஒரு என்கவுண்டருக்குப் பின் தானே போலிஸைத் தேடி வரும் ரௌடி பொலீஸ் மாதவனிடம் விளையாடும் வேதாள விளையாட்டுத்தான் விக்ரம் வேதா. சமீப காலத்தில் இத்தனை தெளிவாக, இவ்வளவு துல்லிய விவரங்களுடன் வந்திருக்கும் திரைக்கதை இது தான். விஜய் சேதுபதி சொல்லும்…
Read More
சுவாதி கொலை வழக்கு பட டைட்டிலை ‘நுங்கம்பாக்கம்-முன்னு மாத்தியாச்சு!

சுவாதி கொலை வழக்கு பட டைட்டிலை ‘நுங்கம்பாக்கம்-முன்னு மாத்தியாச்சு!

சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த சுவாதி கடந்த ஆண்டு நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். தமிழகத்தையே பரபரப்பாக்கிய இந்த கொலை வழக்கை மையமாக வைத்து ‘சுவாதி கொலை வழக்கு’ என்ற பெயரில் சினிமா எடுக்கப்பட்டு, அதன் டிரைலர் சமீபத்தில் வெளியானது.   இதையடுத்து, இந்த படத்துக்கு தடை விதிக்கக்கோரி சுவாதியின் தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன் சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் படத்தின் இயக்குனர் ரமேஷ் செல்வம், தயாரிப்பாளர் சுப்பையா, கதாசிரியர் ரவி ஆகியோருக்கு எதிராக மத்திய குற்றப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தங்களை போலீசார் கைது செய்யக் கூடும் எனக் கூறி மூவரும் முன் ஜாமீன் கோரி ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதி பிரகாஷ் விசாரித்து, 3 பேரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்நிலையில், ‘சுவாதி கொலை வழக்கு’ என்ற படத்தின் பெயர் ‘நுங்கம்பாக்கம்’…
Read More
மிக மிக அவசரம் படத்தின் கதை  இதுதானா?

மிக மிக அவசரம் படத்தின் கதை இதுதானா?

‘கங்காரு’ படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள படம் ‘மிக மிக அவசரம்’. ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள இதில் கதையின் நாயகியாக ஸ்ரீ பிரியங்கா நடித்துள்ளார். ஸ்ரீபிரியங்கா போலீஸாக வலம் வரவுள்ளாராம். மேலும், இயக்குநர் சீமான், ஹரீஷ், ஈ.ராமதாஸ், முத்துராமன், சக்தி சரவணன், வெற்றிக் குமரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ‘புதிய கீதை’ புகழ் இயக்குநர் ஜெகன்நாத் கதை – வசனம் எழுதியுள்ள இப்படத்திற்கு திரைக்கதை எழுதி தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ்’ மூலம் தயாரித்து, இயக்கியுள்ளார் சுரேஷ் காமாட்சி. இஷான் தேவ் இசையமைத்து வரும் இதற்கு பாலபரணி ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளதாம். படம் குறித்து டைரக்டர்  சுரேஷ்  காமாட்சியிடம் கேட்ட போது, “நாட்டின் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றத்தான் போலீஸ். ஆனால் அந்த போலீஸ் துறை ஒழுக்கமாக உள்ளதா? குறிப்பாக ஆண் போலீசும் பெண் போலீசும் இணைந்து…
Read More