04
Aug
நூற்றுக்கணக்கில் வரும் இளம் இசை அமைப்பாளர்கள் , ஏற்கனவே இங்கு நிலைத்து இருக்கும் பிரபல இசை அமைப்பாளர்கள் ஆகியோர் இடையே தாக்கு பிடித்து சில ஆண்டுகளிலே 25 படங்கள் பணி புரிந்து சாதனை செய்வது சுலபமல்ல. அந்த வகையில் குறைந்த காலத்தில் 25 படங்களுக்கு இசை அமைத்த பெருமையை இளம் இசை அமைப்பாளர் தரன் "பிஸ்தா" படம் மூலம் அடைகிறார். பல்வேறு ஹிட் பாடல்களை வழங்கிய தரன் பிரபல மாடல் தீக்ஷிதாவுடன் விரைவில் திருமண பந்தம் மூலம் இணையவிருக்கிறார் என்பது கூடுதல் செய்தி.புதிய இயக்குனர் ரமேஷ் பாரதி இயக்கத்தில், "மெட்ரோ" சிரிஷ் கதாநாயகனாக நடிக்க, அவருடன் ஜோடியாக மிருதுளா முரளி நடிக்க இருக்கிறார். இவர் பிரபல மலையாள நடிகர் பாஹாத் பாசில் உடன் நடித்த படம் பெரும் வெற்றி படம் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் அருந்ததி நாயர், சதீஷ்,நமோ நாராயணா, யோகி பாபு, சென்டராயன், மற்றும் சுவாமிநாதன், நடிக்கும் இந்த படத்தை…