22
Aug
பருத்தி வீரன் படத்தின் மூலம் இந்திய சினிமாவுலகில் அனைவருக்கும் தெரிந்த முகமாய் பிரபலமானவர் நடிகை பிரியாமணி. தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் அவர் தற்போது தனது நீண்ட நாள் காதலரை மணமுடிக்கவுள்ளார். இவர்களது திருமணம் பெங்களூரில் நாளை(23) நடைபெறவுள்ளது. இந்திய மொழிகள் பலவற்றிலும் நடித்து வருபவர் பிரியாமணி. கடந்த வருடம்(2016) இவருக்கும் முஸ்தபா ராஜ் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களின் திருமண நிகழ்வு தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. இந்நிலையில் நாளை பெங்களூரில் எளிமையான முறையில் பதிவுத் திருமணம் நடைபெற இருக்கிறது. அதனைத் தொடர்ந்து மறுநாள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. இதுகுறித்து செய்தி நிறுவனங்களுக்கு அளித்துள்ள பேட்டியில் தனது திருமணம் குறித்து வெளிவந்துள்ள செய்தி உறுதியானது எனத் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில், எதற்காக பதிவு திருமணம் செய்கிறீர்கள்? எனக் கேட்கப்பட்ட போது,"நானும் முஸ்தபாவும் வெவ்வேறு மதத்தை சார்ந்தவர்கள். ஆகவே யாருடைய மத நம்பிக்கையையும் காயப்படுத்தாமல் பதிவு திருமணம் மேற்கொள்ள…