என் தாம்பத்ய வாழ்க்கையின் வெற்றி ரகசியம்! – கின்னஸ் பக்ரூ ஓப்பன் டாக்!

என் தாம்பத்ய வாழ்க்கையின் வெற்றி ரகசியம்! – கின்னஸ் பக்ரூ ஓப்பன் டாக்!

கின்னஸ் பக்ரு புகழ்பெற்ற குள்ள நடிகர். முப்பது வருடங்களாக தென்னிந்திய திரைப் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். முழு நீள படத்தில் நடித்த மிக சிறிய குள்ள நடிகராக கின்னசில் இடம்பிடித்த சாதனையாளர். திருமணமாகிவிட்டது. மூன்றாம் வகுப்பு படிக்கும் இவரது மகள் தீப்தகீர்த்தி, இப்போது தந்தையை விட வளர்ந்துவிட்டாள். பக்ரு, வெளி நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது அவளும் சென்று             விடுகிறாள். தந்தையோடு விளையாடுவதிலும், பொழுதுபோக்குவதிலும் அவளுக்கு ஆர்வம் அதிகம். ‘‘எனது மகள் படிக்கும் பள்ளி ஆண்டுவிழாவில் தலைமை விருந்தினராக கலந்துகொண்டது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. நிகழ்ச்சியில் என் மகள் நடினமாடினாள். அவ்வளவு சிறப்பாக அவள் நடனமாடுவாள் என்பது எனக்கு தெரியாது. இப்போது நடனம், ஓவியம் இரண்டும் கற்றுக்கொண்டிருக்கிறாள். எனது மகளுக்கு நான் தந்தை என்பதைவிடவும், விளையாட்டுத் தோழன் என்பதுதான் சரி. எனது சிறுவயது பருவத்தில், என் தந்தையுடன் சைக்கிள் பயணம் மேற்கொண்டது சுவாரஸ்யமான அனுபவம். அவரது சைக்கிளில் எனக்காக சிறிய சீட் ஒன்று இணைக்கப்பட்டிருந்தது. நான் கதைபிரசங்க…
Read More