திரைப்பட விளம்பரத்திலும் அரசியல்! – தரமணி ராம் பேட்டி!

திரைப்பட விளம்பரத்திலும் அரசியல்! – தரமணி ராம் பேட்டி!

தமிழில் மிக முக்கியமான இரண்டு படங்களான ‘கற்றது தமிழ்’ மற்றும் ‘தங்கமீன்கள்’ படத்தை இயக்கிய இயக்குநர் ராமின் 3வது படைப்பு தரமணி. முதல் படத்தில் தற்போதைய காலக்கட்டத்தில் தமிழ் மொழியின் நிலையும் அடுத்த படத்தில் இக்கால கல்வி முறையை பற்றியும் காட்டிய இயக்குநர் ராம், தரமணியில் உலகமயமாக்கலால் ஆண்-பெண் உறவில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து பேசி இருக்கிறார். டீசர் முதல் விளம்பரம் வரை அனைத்தும் இப்படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் ஆண்ட்ரியா, வசந்த் ரவி, அஞ்சலி ஆகியோர் நடித்துள்ள இந்த படம் நாளை வெளியாக உள்ள நிலையில் ‘தரமணியின் வழியாக கீழடி வரை’, இயக்குநர் ராம் அளித்த பேட்டி சுருக்கமாக.. ஏன் ‘தரமணி’? வடசென்னை, தென் சென்னை பற்றி நிறைய படங்கள் வந்திருக்கு. தரமணிக்கு அந்த பக்கம் புதிய சென்னை ஒன்று இருக்கு. பன்முக கலாச்சாரம் மற்றும் பல மொழி பேசும் மக்கள் வாழும் பகுதி தரமணி.…
Read More
‘தரமணி’  படத்துக்கு A  சர்டிபிகேட் ஏன் தெரியுமா?

‘தரமணி’ படத்துக்கு A சர்டிபிகேட் ஏன் தெரியுமா?

இன்று வெளியாகியுள்ள தரமணி போஸ்டர்களில், தணிக்கைக் குழுவினரை ரொம்ப லாவகமாக குத்திக் காட்டியுள்ளனர். ஆம். ’கற்றது தமிழ்’ ராம் படைத்துள்ள  தரமணி படத்துக்கு ஏ சான்றிதழ் அளித்துள்ளது சென்சார் குழு. காரணம் படத்தில் பெண் மதுவருந்துவது போல காட்சிகள் உள்ளதாம். இதுவரை இந்தப் படத்தை திரையுலகைச் சேர்ந்த பல விஐபிகள் பார்த்துவிட்டனர். இயக்குநர் பாரதிராஜா இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, 'நானெல்லாம் ஒரு இயக்குநரே இல்லய்யா... ராம்தான் பிரமாதமான இயக்குநர். இந்தியாவிலேயே சிறந்த இயக்குநர் அவன்தான் என்பேன்," என்று பாராட்டினார். ஆனால் தணிக்கைக் குழுவோ, பெண் மதுவருந்தும் காட்சி உள்ளதாகக் கூறி ஏ சான்றுதான் தர முடியும் என்று கூற, தயாரிப்பாளர் ஜேஎஸ்கே மற்றும் இயக்குநர் ராம், "எந்தக் காட்சியையும் நீக்க முடியாது.. நீங்க கொடுக்கிறதைக் கொடுங்க," என உறுதியாக நின்றிருக்கிறார்கள். இப்போது ஏ சான்றிதழுடன்தான் வெளியாகிறது தரமணி. ஆனால் ஹீரோக்கள் சரக்கடிக்கும் காட்சிகள் கொண்ட எத்தனையோ படங்கள் வந்துள்ளன. அவற்றுக்கு யு அல்லது…
Read More
error: Content is protected !!