12
Mar
தமிழகத்திற்கு 5 முதலமைச்சர்களைக் கொடுத்த தமிழ் சினிமாவின் தந்தை யார் என்றே நம்மில் பலருக்குத் தெரியாது. அவர் பெயர் R நடராஜ முதலியார்! இந்தியாவின் முதல் மவுனப் படமான ‘ஹரிச்சந்திரா’ துண்டிராஜ் கோவிந்த பால்கே என்ற மராட்டியரால் 1913-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. இதை வாங்கி பாம்பே காரனேஷன் தியேட்டரில் வெளியிட்டவர் இந்திய சினிமாவின் தந்தை எனப் புகழப்படும் தாதா சாகிப் பால்கே. பம்பாயில் திரையிடப்பட்ட அடுத்த ஆண்டே மதராஸுக்கு வந்த ‘ஹரிச்சந்திரா’, கெயிட்டி தியேட்டரில் 1914-ம் ஆண்டு திரையிடப்பட்டது. அதைக் காண வந்தார் 29 வயதே நிரம்பிய இளைஞரான ஆர். நடராஜ முதலியார். புரசைவாக்கம் மில்லர்ஸ் சாலையில் கார் கம்பெனி நடத்திவந்த அவரை அந்தப் படம் பெரிதும் பாதித்தது. ஆங்கிலேய வியாபாரிகள் நடத்திவந்த ‘அடிசன் & கம்பெனி’ என்ற கார் விற்பனை கடை மட்டுமே அன்று மதராஸில் இருந்த நிலையில் ஆங்கிலேயர் அல்லாத ஒருவரால் தென்னிந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் கார் ஷோரூம் நடராஜ…