ஜே பேபி அழகான ஃபேமிலி டிராமா

ஜே பேபி அழகான ஃபேமிலி டிராமா

இயக்கம்: சுரேஷ் மாரி நடிகர்கள்: ஊர்வசி, தினேஷ், மாறன் இசை: டோனி பிரிட்டோ பொதுவாக பா ரஞ்சித், நீலம் ப்ரொடக்சன் நிறுவனத்தில் இருந்து வெளிவரும் படங்கள், சாதிய ஒடுக்கு முறைகளை ஏற்றத்தாழ்வுகளை பேசும் என்கிற கருத்து வலுவாக இருக்கிறது. இதுவரையிலும் அப்படி ஆன படங்கள் அந்நிறுவனத்திலிருந்து வந்துள்ளது என்பதே உண்மை. அதிலிருந்து மாறுபட்டு ஒரு குடும்பத்திற்குள் நிகழும் பிரச்சனைகளை, ஒரு அம்மாவின் கதையை, மையப்படுத்தி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் ஜே பேபி. பேபி ஆக வரும் ஊர்வசிக்கு ஐந்து பிள்ளைகள். ஒவ்வொருத்தரும் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள். ஊர்வசி முதிர்ந்த வயதில், ஒவ்வொரு பிள்ளைகளின் வீடுகளில் மாறி மாறி வசித்து வருகிறார். வயதான காரணத்தால் அவருக்கு மறதி பிரச்சினை வந்து வந்து போகிறது. ஒரு கட்டத்தில் அவர் வழிதவறி வெஸ்ட் பெங்கால் சென்று விடுகிறார். போலீஸ் மூலமே இந்த தகவல் அண்ணன் தம்பிகளுக்கு தெரிய வருகிறது. ஏற்கனவே சண்டை போட்டு பிரிந்திருக்கும் அண்ணன்…
Read More