12
Jul
அவ்னி மூவிஸ் சுந்தர் .c வழங்கும் " மீசைய முறுக்கு " இப்படத்தை ஹிப்ஹாப் தமிழா ஆதி கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார். மீசைய முறுக்கு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் சுந்தர்.c , இப்படத்தில் கதாநாயகனாக நடித்து , இசையமைத்து , கதை - திரைக்கதை - வசனம் - பாடல்களை எழுதி இயக்கும் ஹிப்ஹாப் தமிழா , நாயகிகள் ஆத்மீகா , மனிஷா , நடிகர் விக்னேஷ் காந்த் , ஒளிப்பதிவாளர் யு.கே. செந்தில் குமார் , ஒளிப்பதிவாளர் கீர்த்தி வாசன் , படத்தொகுப்பாளர் பென்னி ஆலிவர் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் தயாரிப்பாளர் சுந்தர்.C பேசியது :- " கிளப்புல மப்புல " பாடல் வெளியான நேரத்தில் நான் ஹிப்ஹாப் தமிழா ஆதியை சந்தித்தேன் அவர் ஏதோ பணக்கார குடும்பத்தை சேர்ந்தர்வர் என்று நினைத்திருந்தேன். ஆனால்…