அகமதாபாத் தமிழ் சங்கம் நடத்திய ’சிவாஜியும் தமிழும்’!

அகமதாபாத் தமிழ் சங்கம் நடத்திய ’சிவாஜியும் தமிழும்’!

அகமதாபாத் தமிழ் சங்கம் சார்பில் நடிகர் திலகம் சிவாஜியின் 90 -வது பிறந்த நாளை முன்னிட்டு ”சிவாஜியும் தமிழும்” என்ற தலைப்பில் மாபெரும் விழா சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடந்தது. விழாவில் அகமதாபாத் தமிழ் சங்க தலைவர் முனைவர். எஸ். கவிதாஸ் வரவேற்புரை நிகழ்த்தினார். எஸ்.ஆர்.எம். கல்வி குழுமங்களின் நிறுவன வேந்தர் தா.இரா. பாரிவேந்தர் தலைமை வகித்தார். விழாவில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, வி.ஜி.பி. குழும தலைவர் வி.ஜி.பி. சந்தோஷம், வசந்த் அன்ட் கோ தலைவரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான எச். வசந்தகுமார் எம்.எல்.ஏ., புதுவை தமிழ் சங்க தலைவர் வி.முத்து, நக்கீரன் தமிழ் சங்க பொதுச்செயலாளர் மீடியா பாஸ்கர்  ​ மற்றும் கவிஞர் இன்பா ​ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளர்களாக திரைப்பட இயக்குனர் கே. பாக்யராஜ் கலந்து கொண்டார். ”தேசியத்திற்கு சிவாஜி” என்ற தலைப்பில் எச். வசந்தகுமார் எம்.எல்.ஏ. பேசினார். அப்போது அவர் கூறியதாவது: அந்த காலத்தில்…
Read More
சிவாஜி மணிமண்டபம் வரும் 21ல் திறப்பு: தமிழக அரசு தகவல்!

சிவாஜி மணிமண்டபம் வரும் 21ல் திறப்பு: தமிழக அரசு தகவல்!

நடிகர் சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறு சத்யா ஸ்டூடியோ எதிரில் 2 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது. கட்டப்பட்டு வரும் இந்த மணி மண்டபத்தின் 90 சதவிகித பணிகள் முடிந்துவிட்டது. இன்னும் ஒரு சில நாட்களில் கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள சிவாஜி சிலை அகற்றப்பட்டு மணிமண்டபத்தில் வைக்கப்பட உள்ளது. இதற்கான அனுமதியை காண்ட்ராக்டருக்கு பொதுப்பணித்துறைவழங்கி உள்ளது. நான்கு வாயில்களை கொண்ட இந்த மணிமண்டபத்தின் நடு நாயகமாக சிவாஜி சிலை வைக்கப்படுகிறது. சுமார் 2 ஆயிரத்து 124 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த மணிமண்டபத்தில் சிவாஜி வாழ்க்கையை சொல்லும் புகைப்பட கண்காட்சி இடம்பெறுகிறது. திராவிட கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது. தற்போது வண்ணம் பூசும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. வருகிற 21-ம் தேதி சிவாஜி பிறந்த நாள். அன்று மணிமண்டபம் திறப்பு விழாவை பிரமாண்டமாக நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது.…
Read More