14
Jul
மலையாள நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட வழக்க பிரபல நடிகர் திலீப்பை கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக காவ்யா மாதவனும் தலை மறைவாகியுள்ளார். கேரள காவல்துறை இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு தகவல்களை யும், பலரிடம் விசாரணையும் நடத்தி வருகிறது. திலீப் கைது செய்யப்பட்டிருப்பது தொடர்பாக பாவனா யாரிடமும் பேசாமல் இருந்தார். இந்நிலையில் திலீப் கைது செய்யப்பட்டிருப்பது தொடர்பாக பாவனா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ''ஒரு தொலைக்காட்சியிலோ, பத்திரிகையாளர் சந்திப்பிலோ உட்கார்ந்து கொண்டு என் எண்ணங்களை விவரிக்கும் மனநிலையில் நான் இல்லை. அதனால்தான் இப்போது இந்த அறிக்கையை இப்படி வெளியிடுகிறேன். கடந்த பிப்ரவரி 17 அன்று, துரதிர்ஷ்டவசமான, மறக்க முடியாத சோதனையைக் கடந்து வந்தேன். நேர்மையாக கேரள மாநில காவல்துறையிடம் புகார் தெரிவித்தேன். இப்போது வரை விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அந்த விசாரணையில் சமீபத்திய கைதுகளும், தகவல்களும் உங்களைப் போலவே எனக்கும் அதிர்ச்சியைத் தந்துள்ளன. எனக்கு யாரிடமும் எந்த…