16
Jul
ஐந்தாறு படங்களில் கமிட்டாகி தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்கள் பட்டியலில் இடம் பிடித்தவர் நடிகர் விஜய் சேதுபதி. வருடம் தோறும் 6க்கும் அதிகமான படங்களில் விறுவிறுப்பாக நடித்து அதை ரிலீஸ் செய்தும் வருகிறார். விக்ரம் வேதா, 96, அநீதி கதைகள், சீதகாதி, புரியாத புதிர், இடம் பொருள் ஏவல் ஆகிய படங்கள் இவரது நடிப்பில் உருவாகி வருகிறது. இந்நிலையில், ரேணிகுண்டா இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கத்தில் உருவாகி வரும் கருப்பன் படத்தில் நடித்து வருகிறார். இதில், இவருக்கு ஜோடியாக தன்யா நடிக்கிறார். வில்லன் ரோலில் பாபி சிம்ஹா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இப்படத்தின் மோஷன் போஸ்டர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இந்த போஸ்டரில் அவர், ஜல்லிக்கட்டு மாட்டை அடக்குவது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. தற்போது கருப்பன் படத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதி, இயக்குனர் பன்னீர்செல்வம், தயாரிப்பாளர் ஆகியோருக்கு திருச்சி மாவட்ட ஜல்லிக்கட்டு பேரவைச் செயலாளர் காத்தான் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.…