பிக் பாஸ்  ஓவியா நடிப்பில் தயாரான ‘ போலீஸ் ராஜ்யம்!’

பிக் பாஸ் ஓவியா நடிப்பில் தயாரான ‘ போலீஸ் ராஜ்யம்!’

அன்னபூரணி மூவீஸ் சார்பில் அருணாச்சலம் தயாரித்து இருக்கும் படம் போலீஸ் ராஜ்யம். பிருத்விராஜ், ஓவியா, ஜெமினி கிரண், கலாபவன் மணி, சத்யா, ஐஸ்வர்யா, ஜெகதீஷ், சீமா, தேவா,பாபுராஜ் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தில் உளவுத்துறை அதிகாரியாக பிருத்விராஜ் நடித்திருக்கிறார்.   களவாணி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமாகி பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களின் கனவு கன்னி ஆன ஓவியா போலீஸ் ராஜ்யம் படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார்.இயற்கை வளம் கொஞ்சும் கிராமத்தில் அப்பா அம்மா குழந்தைகள் என மகிழ்ச்சிகரமாக வாழ்ந்து வரும் குடும்பத்தில் தொடர்ந்து கொலைகள் நிகழ்கிறது.  ஏன் இந்த கொலை குடும்பத்தில் மட்டுமல்ல அந்த ஊரில் பல்வேறு அசம்பாவிதங்கள் அரங்கேறுகின்றன. உள்ளூர் காவல் துறையால் துப்புத் துலக்க முடியாமல் தடுமாற தொடர் கொலைகள் நிகழ காரணம் என்ன  குற்றவாளி யார் என்பதை கண்டுபிடிக்கும் சிறப்பு புலனாய்வு அதிகாரியாக பிருத்விராஜ் அரசால் நியமிக்கப்படுகிறார். தொடர் கொலைக்கான காரணத்தையும், குற்றவாளியையும் கண்டுபிடித்து கொலைகாரனை பிருத்விராஜ்…
Read More
ஓவியா ஃப்ரீதான் – ஆனா அவர் படங்கள் ஸ்பீடா ரெடியாகுது!

ஓவியா ஃப்ரீதான் – ஆனா அவர் படங்கள் ஸ்பீடா ரெடியாகுது!

தனியார் சேனல்  ஒன்று  தன் வளர்ச்சிக்காக தயாரித்து வழங்கி  ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியிலிருந்து நடிகை ஓவியா வெளிவந்ததிலிருந்து அந்நிகழ்ச்சியின் டி.ஆர்.வி. குறைந்து விட்டதாம். அதே சமயம் ஓவியாவுக்கு அடுத்தடுத்து  பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. ஆனாலும், அவர் எந்தப் படங்களிலும் கமிட் ஆகாமல்  தவிர்த்து வருகிறார். இதனிடையே  பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு அவர் நடித்த படங்கள் கிடப்பில் இருந்தன. தற்போது அவர் நடித்த படங்களை வெளியிட திட்டமிட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாது, மலையாளத்தில் அவர் நடித்த படங்களைத் தமிழில் டப் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன் முதற்கட்டமாக அவர் நடித்த ‘மனுஷ்ய மிருகம்’ என்ற திரைப்படம் தமிழில் வெளிவரவிருக்கிறது. அப்படத்தின் டீசர் ஆகஸ்ட் 26ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போதே ‘ஓவியா ஆர்மி’ என அவரது ரசிகர்கள் எக்கச்சக்கமானோர் ஆதரவு தெரிவித்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகும் நடிகை ஓவியாவுக்கு…
Read More
விஜய் டிவியின் பிக் பாஸ் டீமில் ஓவியா  தற்கொலை முயற்சி?

விஜய் டிவியின் பிக் பாஸ் டீமில் ஓவியா தற்கொலை முயற்சி?

விஜய் டிவியில் நாள்தோறும் ஒளிப்பரப்பப்படும் வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். கமல் தொகுத்து வழங்கும் இநீகழ்ச்சியை ஒரு சாரார், இது முன்பே திட்டமிட்டு நடத்தப்படும் ஒரு Scripted நிகழ்ச்சி என்று கருத்து தெரிவித்தாலும், உள்ளே நடக்கும் பல நிகழ்வுகள் தினந்தோறும் சமூகவலை தளங்களில் விவாதப் பொருளாக மாறிவருகிறது. இந்நிகழ்ச்சியை தடைசெய்யக்கோரிய இந்து மக்கள் கட்சி உட்பட பல்வேறு அமைப்பினரும் கோரிக்கை வைத்துவரும் நிலையில்,இந்நிகழ்ச்சி தினந்தோறும் அடுத்தடுத்து சர்ச்சையை உருவாக்கிவருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடிகர் பரணியும் சக பங்கேற்பாளர்களின் நெருக்கடியை சமாளிக்கமுடியாமல் பித்து பிடித்தவர் போல் மாறினார். இதையடுத்து பிக்பாஸ் வீட்டின் சுவரைத்தாண்டி குதிக்கும் விபரீத முயற்சி யிலும் அவர் ஈடுபட்டார். அதுமட்டுமல்லாமல் பரணியுடன் ஏற்பட்ட ஒரு பிரச்சனையில் அவரை சிலிண்டரை கொண்டு தாக்க முற்பட்டார் கஞ்சா கருப்பு. அருகில் இருந்தவர்கள் தடுக்காமல் போயிருந்தால் அன்றே பிக்பாஸ் வீடு ரத்த களரியாக மாறியிருக்கும். தற்போது பங்கேற்பா ளர்களை உளவியல் ரீதியாக…
Read More