05
Sep
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான். ரோஜாவில் தொடங்கிய இவரது இசைப்பயணம் 2 ஆஸ்கர்கள் மற்றும் கிராமி விருது என சென்று தற்போது ஒன் ஹார்ட்: தி ஏ.ஆர்.ரகுமான் கான்செர்ட் படம் வரை சென்று கொண்டே இருக்கிறது. அவரின் லேட்டஸ்ட் ரிலீஸ் ஒன் ஹார்ட் ’. நம் சினிமா ரசிகர்கள் எப்போதும், புதுமையை ஆராதித்து கொண்டாடுபவர்கள். அவர்களுக்காகவே கான்சர்ட் ஜேனர் என்ற புதுவகையான சினிமாவை ‘ஒன்ஹார்ட்’ படத்தின் மூலமாக அறிமுகப்படுத்தி இருக்கிறார் ஏ.ஆர் ரகுமான். அதாவது ஒரு இசைகலைஞர் தன்னுடைய இசைக்குழுவுடன் இணைந்து ஒரு இசை நிகழ்ச்சியை எவ்விதம் வெற்றிக்கரமாக மேடையேற்றுகிறார் என்பதை விவரிக்கும் படமே தான் கான்சர்ட் ஃபிலிம். ஹாலிவுட்டில் இதற்கு முன் ஏராளமான இசைக் கலைஞர்களின் தனிப்பட்ட நிகழ்ச்சியை முன் வைத்து இது போன்ற படங்கள் வெளியாகியிருக்கின்றன. இருப்பினும் மைக்கேல் ஜாக்சன் இறப்பதற்கு முன் அவரை வைத்து உருவாக்கப்பட்ட திஸ் இஸ் இட் (This is it) என்ற கான்சர்ட் திரைப்படம் வெளியாகி…