வரும் 30ம் தேதி தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தல்!

வரும் 30ம் தேதி தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தல்!

தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்கு 2 வருடத்துக்கு ஒரு முறை தேர்தல் நடப்பது வழக்கம். தற்போதைய நிர்வாகிகளின் பதவி காலம் நிறைவடைந்ததை அடுத்து வரும் 30ம் தேதி புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. சென்னை வடபழநியில் உள்ள இசை அமைப்பாளர்கள் சங்கத்தில் நடக்கும் இந்த தேர்தலுக்கு மாவட்ட முன்னாள் நீதிபதி பாலசுப்ரமணியம் தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சுமார் 2,300 உறுப்பினர்கள் இத்தேர்தலில் வாக்களித்து புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யவுள்ளனர். கடந்த முறை நிர்வாக பதவியை வகித்த இயக்குநர் விக்ரமன் தலைமையிலான அணி சிறு சிறு மாற்றங்களுடன் இந்த தேர்தலையும் சந்திக்கிறது.” விக்ரமன் தலைமையில் புதுவசந்தம் என்ற அணியும் புதிய அலைகள் என்ற பெயரில் மற்றொரு அணியும் போட்டியிடுகிறது. ஆனாலும் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் விக்ரமன், செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் ஆர் கே செல்வமணிக்கு எதிராக, புதிய அலைகள் அணி வேட்பாளர்களை நிறுத்தவில்லை. சுயேச்சையாக இயக்குநர் ஈ.ராமதாஸ் போட்டியிடுகிறார். அணி விவரம்: புது…
Read More