05
Jul
அண்டாவக் காணோம்... என்னய்யா இது... இப்படியெல்லாமா தலைப்பு வைப்பாங்க? என்று யோசிப்பவர்களுக்கு படத்தின் இயக்குநர் வேல்மதி தரும் பதில்... "சார்.. நகர்ப்புற வாழ்க்கையில் எப்படியோ.. ஆனால் கிராமங்களில் எளிய மனிதர்களின் எளிய வாழ்க்கையில் அண்டாவுக்கும் ஒரு பங்குண்டு! அந்தப் பாத்திரத்தைப் பார்த்ததுமே இது யார் வீட்டு அண்டா என்று சொல்லி விடு வார்கள். ஒரு குடும்பத்தின் பெருமைகளில் ஒன்று அண்டா. அந்த வீட்ல அண்டா இருக்குன்னா ஒரு கெத்தா இருக்கும். இப்படிப்பட்ட அண்டா ஒரு நாள் காணாமல் போகிறது... அதைத் தொடர்ந்த நிகழ்வுகள்தான் கதை. அதனால்தான் படத்துக்கு அண்டாவ காணோம்னு வச்சேன்," என்கிறார். சுவாரஸ்யமான லீட்தான். ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பொரேஷன் சார்பில் ஜே சதீஷ்குமார் தயாரித்து வெளியிடும் இந்தப் படத்தின் ட்ரைலர் பத்து நாட்களுக்கு முன்பு வெளியானது. பெரிய நட்சத்திர பலமில்லாமல் கதையை மட்டுமே நம்பி உருவான இந்தப் படத்தை இதுவரை ஆன்லைன் ஒரு லட்சம் பேருக்கு மேல் பார்த்துள்ளனர். சமூக…