மகா கலைஞன் நடிகர் சீயான் விக்ரமன்- பிறந்த நாள் ஸ்பெஷல்!

மகா கலைஞன் நடிகர் சீயான் விக்ரமன்- பிறந்த நாள் ஸ்பெஷல்!

தமிழ் சினிமாவில் போராடி வெற்றி பெற்று, இம்றைக்கும் ஒவ்வொரு படத்திலும் ரசிகர்களுக்கு புதிய சினிமா அனுபவத்தை கொடுப்பதற்காக உடலை உருக்கி உழைக்கும் மகாக் கலைஞன் நடிகர் சீயான் விக்ரமனின் 58ஆவது பிறந்தநாள் இன்று..! சீயான் என்று மூன்றெழுத்தில் மூச்சை வைத்திருக்கும் ,நண்பர்கள், பள்ளி, கல்லூரி தோழர்கள் என எல்லா இடங்களிலும் 'கென்னி' (இயற்பெயர் ஜான் கென்னடி வினோத் ராஜ்.0 என்ற நாமகரணம் கொண்ட. விக்ரமின் போராட்ட வாழ்வும், சினிமா மீது அவருக்கு இருக்கும் வெறித்தனமான காதலும் குறித்த சிறு பதிவு...! வெள்ளித்திரை வெற்றிக்காக கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் காத்திருந்த விக்ரம் இந்த இடை வெளியில் கலாட்டா குடும்பம், சிறகுகள் உள்ளிட்ட ஒரு சில தொலைக்காட்சி தொடர்களிலும் தோன்றியுள்ளார் என்பது வெகு சில ரசிகர்களுக்கு மட்டுமே தெரிந்த தகவல்.இதேபோல வெற்றிக்காக காத்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் டப்பிங் கலைஞராக தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் நடிகர் விக்ரம் டப்பிங் பேசியது இப்பொழுது திரைப்படம் பார்க்கும்போது ஒரு…
Read More
போர்க்கள பூமியில் 30 வருடங்களுக்கு பிறகு திரையரங்கம் திறக்கப்பட்டுள்ளது!

போர்க்கள பூமியில் 30 வருடங்களுக்கு பிறகு திரையரங்கம் திறக்கப்பட்டுள்ளது!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சுமார் 30 வருடங்களுக்குப் பிறகு சினிமா அரங்குகள் திறக்கப்பட்டுள்ளது. புல்வாமா, சோபியான் ஆகிய இடங்களில் ஏற்கனவே சினிமா திரையரங்குகள் கடந்த வருடம் திறக்கப்பட்டன. கடந்த சில நாட்களுக்கு முன் பாரமுல்லாவில் திறக்கப்பட்டது. இந் நிலையில் பந்திபோரா, கதர்பால், குல்காம் மாவட்டங்களில் தலா ஒரு திரையரங்குகள் திறக்கப்படும் என ஜம்மு-மாநில துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்கா தெரிவித்துள்ளார். மேலும், ''பாகிஸ்தான் மற்றும் ஒரு சிலரின் சுற்றுச்சூழல் அமைப்பு பல வருடங்களாக ஜம்மு-காஷ்மீர் மக்களின் கனவுகளை அழிக்க முயற்சித்தனர். ஆனால் தற்போது ஜம்மு- காஷ்மீர் மக்கள் மற்றும் இளைஞர்கள் புதிய கனவுகளை கொண்டுள்ளனர். புதிய சூழ்நிலை உருவாக உதவி புரிந்து வருகிறார்கள் என்பதை என்னால் கூறமுடியும். அமைதியான இடத்தில்தான் கலை உருவாகும் என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். எங்கு அமைதி இல்லையே, அங்கு கலை இல்லை. ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட சூழ்நிலையால் கலைஞர்கள் பாதிக்கப்பட்டனர். ஆனால் இப்போது, ஜம்மு காஷ்மீரின் இழந்த…
Read More
நம் சென்னையில் இருந்த இந்தியாவின் முதல் பீச் டிரைவ்-இன் தியேட்டர் தற்போது அது மூடப்படவுள்ளது!

நம் சென்னையில் இருந்த இந்தியாவின் முதல் பீச் டிரைவ்-இன் தியேட்டர் தற்போது அது மூடப்படவுள்ளது!

இந்தியாவின் முதல் பீச் டிரைவ்-இன் தியேட்டர் மற்றும் 1990களில் சென்னையின் முக்கிய அடையாளமான பிரார்த்தனா பீச்-டிரைவ்-இன் தியேட்டர் பிரீமியம் குடியிருப்பு வளாகத்தை உருவாக்க தயாராக உள்ளது. 1991ம் ஆண்டு இந்தியாவின் முதல் பீச் டிரைவ் இன் தியேட்டர், சென்னையின் கிழக்குக் கடற்கரை சாலையில் உருவாக்கப்பட்டது..பிரார்த்தனா டிரைவ் இன் தியேட்டர் என்ற திறந்தவெளி திரையரங்கம், அடுத்து ஆராதனா என்ற உட்புற திரையரங்கம் திறக்கப்பட்டது. காரில் நேரடியாக பிரார்த்தனா தியேட்டருக்குச் சென்று காரில் இருந்தபடியும், பக்கத்தில் நாற்காலியைப் போட்டு அமர்ந்தும், பாயைப் போட்டு படுத்தபடி, மிகப் பெரும் திரையில் படம் பார்ப்பது சென்னைவாசிகளுக்கு புது அனுபவமாக இருந்துச்சு. ஆனா இந்த கொரோனா தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட தொழில்களில் சினிமா தொழிலும் ஒன்றாக இருந்தது. பல தியேட்டர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன.. அப்படி பாதிப்பை சந்தித்த தியேட்டர்களில் பிரார்த்தனா தியேட்டரும் அமைந்தது. கடந்த நான்கு வருடங்களாகவே அந்தத் தியேட்டர் மூடப்பட்டுக் கிடந்தது.இப்போது தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்று…
Read More
கேன்ஸ் விழாவில் தனக்கு நிகழ்ந்த மிரட்டல்களை பற்றி சன்னி லியோன் பேசியுள்ளார்

கேன்ஸ் விழாவில் தனக்கு நிகழ்ந்த மிரட்டல்களை பற்றி சன்னி லியோன் பேசியுள்ளார்

உலகம் முழுவதும் புகழ்பெற்ற கேன்ஸ் விழாவில் ஆவணப்படங்கள், திரைப்படங்கள் போன்றவை திரையிடப்படுகின்றன. அந்தவகையில் அனுராக் காஷ்யப் இயக்கிய ‘கென்னடி’, ராகுல் ராய் நடித்த ‘ஆக்ரா’, மணிப்பூரில் 1990-ல் வெளியான ‘இஷானோ’ ஆகிய மூன்று இந்தியப் படங்கள் திரையிடப்படுகின்றன. அனுராக் காஷ்யப் இயக்கிய ‘கென்னடி’ படத்தில் சன்னி லியோன் நடித்திருப்பதால் அவரும் இவ்விழாவில் கலந்து கொண்டிருக்கிறார்.இந்நிலையில் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியின்போது தனது சினிமா வாழ்க்கை குறித்து சன்னி லியோன் பேசியிருக்கிறார். ``ஆரம்பத்தில் நான் ப்ளூ ஃபிலிம்களில் நடித்து வந்தேன். அதன்பின் திரையுலகிற்கு நடிக்க வந்தேன். அப்போது நான் சந்தித்த எதிர்ப்புகள் ஏராளம். பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்னை கலந்துகொள்ள அழைத்தார்கள். ஆனால் நான் இந்தியாவிற்கு வர மறுத்து விட்டேன். என்னுடைய கணவர் டேனியல்தான் என்னை இந்தியாவிற்கு அழைத்து வந்தார். என்னை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வைத்ததும் அவர்தான். அந்நிகழ்ச்சியின் மூலம்தான் என் மீது இருந்த தவறான பார்வை நீங்கியது. என்னையும் ஒரு நடிகையாக அனைவரும்…
Read More
பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனம் 50 திரையரங்களை மூட இருப்பதாக தெரிவித்துள்ளது

பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனம் 50 திரையரங்களை மூட இருப்பதாக தெரிவித்துள்ளது

இந்தியாவின் முன்னணி திரையரங்க குழுமங்களில் ஒன்றான பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனம் அடுத்த ஆறு மாதங்களில் நாடு முழுவதுமுள்ள 50 திரையரங்களை மூட இருப்பதாக தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் பிவிஆர் நிறுவனத்துடன் ஐநாக்ஸ் குழுமம் இணைக்கப்பட்டு பிவிஆர் - ஐநாக்ஸ் லிமிடெட் என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தொடர் நஷ்டத்தை சந்தித்து வரும் 50 திரையரங்களை அடுத்த ஆறு மாதங்களில் மூட இருப்பதாக பிவிஆர் - ஐநாக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிறுவனம், மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.333 கோடி நிகர இழப்பைப் பதிவு செய்துள்ளது. அதற்கு முந்தைய முந்தைய டிசம்பர் காலாண்டில் ரூ. 16.1 கோடி லாபமும், அதற்கு முந்தைய காலாண்டில் ரூ.105 கோடி நஷ்டமும் பிவிஆர் - ஐநாக்ஸ் நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ளது.நான்காவது காலாண்டில், செயல்பாடுகளின் வருவாய் இருமடங்காக அதிகரித்து, ரூ.1,143 கோடியை எட்டியுள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் இது ரூ.536 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.…
Read More
அமேஸான் பிரைம் வீடியோ-வின்  முதல் தமிழ் பிரைம் தொடர் – “வெள்ள ராஜா”!

அமேஸான் பிரைம் வீடியோ-வின் முதல் தமிழ் பிரைம் தொடர் – “வெள்ள ராஜா”!

சகுனி’, ‘ஜோக்கர்’, ‘காஷ்மோரா’, ‘கூட்டத்தில் ஒருத்தன்’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘அருவி’ ஆகிய படங்களைத் தயாரித்த ட்ரீம் வேரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது வெப் சீரியஸ் தயாரிப்பிலும் இறங்கியிருக்கிறது. இந்த நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் ‘வெள்ள ராஜா’ என்ற வெப் சீரியஸை தயாரித்து உள்ளார்கள். இந்த வெப் சீரியஸில் உலக அளவில் புகழ் பெற்ற வீடியோ நிறுவனமான அமேஸான் பிரைம் வீடியோவில் வரும் டிசம்பர் 7-ம் தேதியன்று வெளியாகவுள்ளது. இந்த வெப் சீரியஸில் நடிகர் பாபி சிம்ஹாவும், நடிகை பார்வதி நாயரும் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் குகன் சென்னியப்பன் இந்தத் தொடரை இயக்கி இருக்கிறார். இத்தொடர் போதை மருந்து கடத்தலை கதைக் கருவாகக் கொண்டது. வட சென்னையின் மையத்தில்  அமைந்திருக்கும்  பிரபலமான  தங்கும் விடுதி  ‘பாவா  லாட்ஜ்’.  இந்த விடுதிதான் போதை மருந்து விற்பனையின் மையமாக இருந்து வருகிறது. இந்த விடுதியில்  பிணையக் கைதி  சூழலில் …
Read More
குறும்படங்கள் , திரைப்படங்களுக்கு ‘டீக்கடை சினிமா ‘விருது வழங்கும்  விழா

குறும்படங்கள் , திரைப்படங்களுக்கு ‘டீக்கடை சினிமா ‘விருது வழங்கும் விழா

சென்னை கோடம்பாக்கம் , வடபழனி பகுதிகளில் உள்ள டீக்கடைகளில் அமர்ந்து தேநீர் அருந்துபவர்களின் பேசுபொருள் அரசியலை விட சினிமாவே அதிகமாக இருக்கும் . ஒவ்வொரு டீக்கடையிலும் எதிர்காலக் கனவுகளுடன் எத்தனையோ இளைஞர்கள் இன்றும் கூடி சினிமா பற்றிப் பேசுகிறார்கள் ; கனவுகளைப் பகிர்கிறார்கள் .. ஆனால் இப்படிப்பட்ட இளை ஞர்கள் டீக்கடையோடு பேசிக் கலைந்து சென்று விடக் கூடாது. அவர்களை ஒருங்கிணைத்து வழிகாட்ட வேண்டும் என்று கவலைப்பட்டு உதயமானதுதான்  ' டீக்கடை சினிமா  ' அமைப்பு . இதன் தொடக்கப் புள்ளியை உதயகுமார் போட , கிருபாகரன் , நிஷாந்த் ,விவேக் ஆகியோரும் இணைந்து கை கொடுக்கவே அது நால்வர் அணியாக உருவாகியிருக்கிறது.  இவர்கள் இம்முயற்சியை முன்னெடுக்கவே இப்போது 'டீக்கடை சினிமா ' திரைக்கனவு  சுமந்த 1000 பேர் கொண்ட அமைப்பாக மாறியிருக்கிறது  . "கைதட்டல் சத்தத்தில் உன் கண் கலங்கினால் நீயும் கலைஞனே "என்கிற உணர்வோடு சக கலைஞர்களை ஊக்குவிக்க முனைந்த இந்த அமைப்பினர்  சென்ற ஆண்டு சிறந்த…
Read More