தெலுங்கில் அறிமுகமாகும் தன்ஷிகா!

தெலுங்கில் அறிமுகமாகும் தன்ஷிகா!

சினம்’ என்ற குறும்படத்தில் நடித்திருந்தார் நடிகை சாய் தன்ஷிகா. இந்த குறும்படம் கொல்கத்தாவில் நடைபெற்ற கல்ட் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அப்போது சிறந்த நடிகைக்கான விருது உள்பட எட்டு விருதுகள் ‘சினம் ’ குறும்படத்திற்கு கிடைத்தது. மேலும் நார்வே திரைப்படவிழாக்களிலும் சிறந்த நடிகைக்கான விருதையும், கலிஃபோர்னியாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்படவிழாவிலும் திரையிடப்பட்டு விருதினை வென்றிருக்கிறது ‘சினம்’. சிறந்த நடிகைக்கான விருதினை வென்றிருந்த மகிழ்ச்சியில் இருந்த நடிகை சாய்தன்ஷிகாவை  சந்தித்து வாழ்த்து சொல்லிவிட்டு உரையாடத் தொடங்கினோம். ‘நான் தற்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஒரு கதாசிரியர்கள் தங்களின் மனதில் ஒரு நடிகையை வைத்து திரைக்கதையை உருவாக்குகிறார்களோ அந்த தருணம் தான் அனைத்து நடிகைகளுக்கும் சந்தோஷமான தருணம். எனக்கு அப்படி ஒரு அனுபவம் அண்மையில் ஏற்பட்டது. தெலுங்கு திரையுலகில் பிரபலமான கதாசிரியர் கிரண். அவர் என்னைச் சந்தித்து, உங்களை மனதில் வைத்து மேளா என்ற ஒரு திரைக்கதையை உருவாக்கியிருக்கிறேன் என்றார். இந்த கதையின் மூலமாகத்தான் தான் இயக்குநராக அறிமுகமாகிறேன். இது கதையின்…
Read More
ஆக்‌ஷன் ரோலில் மிரட்ட தயாரான நிகிஷா!

ஆக்‌ஷன் ரோலில் மிரட்ட தயாரான நிகிஷா!

தெலுங்கில் பவன் கல்யாண் ஜோடியாக 'புலி' படத்தில் 2010-ம் ஆண்டு அறிமுகமானவர் நிகிஷா படேல். தமிழ் சினிமாவுக்கு ‘தலைவன்’  படத்தின் மூலம் அறிமுகமானார்.  அதன் பிறகு ‘என்னமோ ஏதோ’  படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார். இதையடுத்து 'கரையோரம்', 'நாரதன்', '7 நாட்கள்' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.    தற்போது நிகிஷா படேல் தெலுங்கு படம் ஒன்றில் கமிட் ஆகியுள்ளார். புதுமுக இயக்குனர் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ஆக்‌ஷன் ரோலில் அதிரடியாக களமிறங்குகிறார் நிகிஷா. இப்படத்தில் முகுல் தேவ் வில்லனாக நடிக்கவுள்ளார்.    படத்தின் கதை குறித்து நிகிஷா கூறுகையில், ‘நான் ஒரு குத்துசண்டை வீராங்கனை, எனக்கு ஆக்‌ஷன் படத்தில் நடிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக ஆசை இருந்தது. அந்த ஆசை இப்போது நிறைவேறவுள்ளது. தற்போது கமிட் ஆகியுள்ள இப்படத்தில் முழு ஆக்‌ஷன் ரோலில் மிரட்டவுள்ளேன். இனி வரும் காலங்களிலும் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படங்களிலே களமிறங்கவிருக்கிறேன்’ என தில்லாக கூறுகிறார்…
Read More
என் படுக்கையில் பங்கு கேட்ட தமிழ் தயாரிப்பாளர்!  ஸ்ருதி பகீர்

என் படுக்கையில் பங்கு கேட்ட தமிழ் தயாரிப்பாளர்! ஸ்ருதி பகீர்

சினிமா வாய்ப்பு தேடி வரும் பெண்கள், பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்பது பல வருடங்களாகவே செய்தி வெளிவந்து கொண்டிருக்கிறது. தமிழ், ஹிந்தி சினிமா உலகில் உள்ள பல நடிகைகள், தாங்கள் திரைத்துறை வந்த போதும், அதன் பின்பும் பாலியல் தொந்தரவுகளை சந்தித்ததாக ஏற்கனவே கூறியிருந்தனர். அதிலும் திரையுலகில் பாலியல் ரீதியாகப் ஆண்கள் பாதிக்கப்படுவதும் கூட சர்ச்சையுடன் பேசப் பட்டது. அதே சமயம் இந்த . பிரச்னைகளை வெளியே சொல்ல முடியாமல் உடல்ரீதியாகவும் மனதளவிலும் மிகுந்த வலியைச் சுமந்துகொண்டு திரையில் தோற்றமளிக்கின்றனர் பலர். இந் நிலையில் தனக்கு ஏற்பட்ட கொடிய அனுபவம் ஒன்றை நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பகிர்ந்துகொண்டுள்ளார். நெருங்கி வா முத்தமிடாதே, நிபுணன், சோலோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ஸ்ருதி ஹரிஹரன் மலையாள, கன்னடத் திரையுலகில் நிறைய படங்களில் நடித்துவருகிறார். இந்தியா டுடே குழுமம் சார்பில் ஹைதராபாத்தில் நடத்தப்பட்ட ‘சௌத் இந்தியன் கான்க்லேவ் 2018’ நிகழ்ச்சியில் ‘செக்ஸிசம் இன் சினிமா –…
Read More
சக்தி -படத்தில் வரலட்சுமியுடன் சரத் இளைய மகள் பூஜாவும் இணைந்தார்!

சக்தி -படத்தில் வரலட்சுமியுடன் சரத் இளைய மகள் பூஜாவும் இணைந்தார்!

தமிழ் நடிகர் சங்கத்தலைவராகவும், முன்னணி ஹீரோவாகவும் வலம் வந்தவர் சரத்குமார். இவர் தற்போது ஹீரோவாக மட்டுமில்லாமல் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த இணை கேரக்டர்களிலும் நடித்து வருகிறார். அதே சமயம் இவரது மூத்த மகள் வரலட்சுமி சரத்குமார் தற்போது தமிழ், கன்னட, மலையாள சினிமாக்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். ‘போடா போடி’ படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான இவர் பாலா இயக்கத்தில் வெளியான ‘தாரை தப்பட்டை’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ள இப்படம் அதிரடி, மர்மம் கொண்ட ஒரு திரில்லர் படமாக உருவாக இருக்கிறது.தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி களில் உருவாக இருக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை நடிகர்கள் சிவகார்த்திகேயன், ராணா டகுபதி, துல்கர் சல்மான் மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டனர். சாம்.சி.எஸ். இசையமைக்கும் இந்த படத்தை பேப்பர் லேட் பிக்சர்ஸ் சார்பில் ஊடக நிபுணர் சரண்யா லூயிஸ் தயாரிக்கிறார். வருகிற…
Read More
அனுஷ்காவுடன் கல்யாணமா? பிரபாஸ் பதில்!

அனுஷ்காவுடன் கல்யாணமா? பிரபாஸ் பதில்!

நடிகை அனுஷ்காவுடன் காதல் என்ற தகவல் வெறும் வதந்தி. அதில் உண்மை இல்லை. தற் போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை’ என்று நடிகர் பிரபாஸ் கூறியுள்ளார்.  பல்வேறு தெலுங்கு படங்களில் நடித்துள்ள நடிகர் பிரபாஸ், ‘பாகுபலி’ படத்துக்குப் பிறகு, வெளிநாடுகளிலும் பிரபலமாகி விட்டார். தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி ஆகிய 4 மொழிகளில் தயாராகிவரும் ‘சாஹோ’ என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இதற்கிடையில், இவரது திருமணம் குறித்து பல வதந்திகள் வந்த வண்ணம் உள்ளன. நடிகை அனுஷ்காவுடன் காதல் என்றும், இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. அவர்கள் இருவரும் இத்தகவல்களை மறுக்காததால், ஒருவேளை உண்மையாக இருக்கு மோ என்ற சந்தேகமும் இருந்தது. இந்நிலையில், ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டியளித் துள்ள பிரபாஸ், தனது திருமணம் குறித்து முதன்முறையாக பேசியுள்ளார். அப்போது அவர் கூறியது, “தற்போது திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை. இதனால்…
Read More
போர்ச்சுக்கல் புராணம் பாடிய ஸ்ரேயா!

போர்ச்சுக்கல் புராணம் பாடிய ஸ்ரேயா!

ஏஸ்டிஆர் ஆன சிம்புவின் `AAA' படத்திற்குப் பிறகு, அரவிந்தசாமியுடன் `நரகாசுரன்' படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ள நடிகை ஸ்ரேயா சரண், தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது பாலகிருஷ்ணா ஜோடியாக `பைசா வசூல்' என்ற தெலுங்கு படத்தில் நடித்துவருகிறார் ஸ்ரேயா. பூரி ஜெகன்நாத் இயக்கும் இந்தப் படத்தின் டீசர் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 28) ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்துக்காக போர்ச்சுகல் சென்றிருந்த ஸ்ரேயா, படப்பிடிப்பை முடித்துவிட்டு அங்குள்ள பகுதிகளை சுற்று பார்த்திருக்கிறார். இதையடுத்து  படக்குழு இந்தியா திரும்பிய நிலையில், போர்ச்சுக்கல்லின் சந்து பொந்துகளுக்குள் சென்றுவந்த அனுபவத்தைச் சொன்னார் ஸ்ரேயா. “‘இந்த படக் கதைப்படி, நான் போர்ச்சுக்கல்ல ஒர்க் பண்றவளா நடிக்கிறேன். அவளுக்கு என்ன மாதிரியான பிரச்னை வருதுன்னு கதை போகும். இதுக்காக போர்ச்சுக்கல் போனேன். இதுவரை தென்னிந்திய படங்கள் காண்பிச்சிருக்காத லொகேஷன்களை இந்தப் படத்துல பார்க்கலாம். ஷூட்டிங்கை முடிச்சுட்டு தோழிகளோட டூர் போயிட்டேன். லிஸ்பன்…
Read More
Prabhas19 கிளாப் அடிச்சாச்சு!

Prabhas19 கிளாப் அடிச்சாச்சு!

SS.ராஜமௌலி இயக்கத்தில் உருவான பாகுபலி படத்தில் கதாநாயகனாக நடித்த பிரபாஸ், அப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு அனைத்து மொழி ரசிகர்களாலும் கவரப்பட்டு உச்ச நட்சத்திரமாக திகழ்ந்துவருகிறார்.உலகத்தையே தனது தனித்துவமான நடிப்பால் உற்று நோக்கவைத்த நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்திற்கு பிறகு, தனது அடுத்தப் படத்திற்கு ஆயுத்தமாகிவிட்டார். 2013ம் வருடம் UV கிரியேஷன்ஸ் தயாரிப்பில் பிரபாஸ் - அனுஷ்கா நடிப்பில் மிர்ச்சி எனும் படம் வெளியாகி வசூல் வேட்டை செய்தது. தற்போது UVகிரியேஷன்ஸ் சார்பாக வம்சி, பிரமோத் மிகுந்த பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்க சூஜித் சைன் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கின்றார் நடிகர் பிரபாஸ். தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு சங்கர்-இசான்-லாய் இசையமைக்க, மதி ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். தேசிய விருது பெற்ற கலை இயக்குனர் சாபு சிரில் இப்படத்தின் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். இன்று பூஜையுடன் துவங்கிய #Prabhas19 படத்தை கிருஷ்னம் ராஜு கிளாப் போர்ட் தட்ட, தில் ராஜு கேமராவை ஆன்…
Read More
பாகுபலி தி கன்க்ளூஷன்’ திரைப்படம் ஏப்ரல் 28, 2017ல் ரிலீஸ் கன்ஃபார்ம்!

பாகுபலி தி கன்க்ளூஷன்’ திரைப்படம் ஏப்ரல் 28, 2017ல் ரிலீஸ் கன்ஃபார்ம்!

பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான படம் 'பாகுபலி'. ராஜமெளலி இயக்கிய இப்படத்தை ஷோபு மற்றும் பிரசாத் இருவரும் இணைந்து தயாரித்திருந்தார்கள். தமிழில் ஞானவேல்ராஜாவும் இந்தியில் கரண் ஜோஹரும் இப்படத்தை வெளியிட்டார்கள். உலகளவில் சுமார் 600 கோடி ரூபாய் வசூல் செய்து இந்தியாவில் தயாரான படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்தது. மேலும், 'பாகுபலி 2' படத்துக்கு பெரும் எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது. அனுஷ்கா பாத்திரத்தின் பின்னணி என்ன, கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் உள்ளிட்ட பல கேள்விகளுக்கு 'பாகுபலி தி கன்க்ளூஷன்'வில் விடை தெரியவிருக்கிறது. தற்போது 'பாகுபலி தி கன்க்ளூஷன்' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு துரிதமாக நடைபெற்று வந்தது. நேற்று (ஜனவரி 6) 'பாகுபலி - தி கன்க்ளூஷன்' படத்தின் படப்பிடிப்பை முழுமையாக முடித்தது படக்குழு. 2012ம் ஆண்டு…
Read More