நான் ஆக்‌ஷன் ஹீரோ என்று சொல்லிக்கொள்ள வெட்கப்படுறேன்! – விஷால்

நான் ஆக்‌ஷன் ஹீரோ என்று சொல்லிக்கொள்ள வெட்கப்படுறேன்! – விஷால்

சமீபத்தில் வெளிவந்த உரு படத்தின் தயாரிப்பாளர் V.P.விஜி, இயக்குநராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘எழுமின்’. தற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை சுற்றியே ‘எழுமின்’ படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார். விவேக், தேவயானி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் நடிகர்கள் விஷால், கார்த்தி, சிம்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ட்ரெய்லரை வெளியிட்டார்கள். விழாவில் தேவயானி பேசியதாவது, ‘படத்தில் சிறுவர்கள் அனைவரும் கடினமான உழைப்பை கொடுத்திருக்கிறார்கள். விவேக் மிக அருமையாக நடித்திருக்கிறார். வருகை தந்துள்ள விஷால், கார்த்தி, சிம்புவிற்கு நன்றி. படக்குழுவினருக்கு அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்’ என்றார். கார்த்தி பேசும்போது, ‘இப்படத்தின் ட்ரெய்லர் பார்க்கும் போது ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. நான் காலேஜ், பள்ளி விழாவிற்கு செல்கிறேன். அங்கு எல்லாம், சினிமா பாடலுக்கு நடனம் ஆடுவது வசனம் பேசுவது என்று எல்லாரும் சினிமா நோக்கி போய் கொண்டு…
Read More
“ திருப்பதிசாமி குடும்பம் “  -இம்மாதம் 25 ம் தேதி வெளியாகிறது!

“ திருப்பதிசாமி குடும்பம் “ -இம்மாதம் 25 ம் தேதி வெளியாகிறது!

ஜெம்ஸ் பிக்சர்ஸ்  முருகானந்தம்.G , ஜே.ஜே.குட் பிலிம்ஸ்  பாபுராஜா   இணைந்து   வழங்கும்    படம்   “ திருப்பதிசாமி குடும்பம் ”.       இந்த படத்தில் ஜே.கே,ஜெயகாந்த் என்கிற இரண்டு கதாநாயகர்கள் அறிமுகமாகிறார்கள். கதாநாயகியாக ஐஸ்வர்யலஷ்மி நடிக்கிறார்.    முக்கிய வேடத்தில் ஜெயன் என்பவர் நடிக்கிறார். மற்றும் தேவதர்ஷினி, மயில்சாமி, முத்துராமன், கே.அமீர், கவிராஜ், சிசர்மனோகர் ஆகியோரும் நடிக்கிறார்கள் .  இயக்கம்   -   சுரேஷ்சண்முகம். இவர் வெற்றிபெற்ற அரசு, கம்பீரம் உட்பட பல படங்களை இயக்கியவர்.                                                                                                                  படம் பற்றி தயாரிப்பாளர் பாபுராஜா கூறியதாவது...”ஒரு குடும்பத்தை பின்னணியாக வைத்து உருவாக்கப் பட்ட திரைக்கதை இது. நிறைய பணம் இருந்தால் மட்டும் வாழ்க்கை நிம்மதியா வாழலாம் என்று நினைகிறார்கள். அனால் பணம் இல்லா விட்டாலும் நேர்மையாக வாழ்ந்தாலும் குடும்பம் நிம்மதியாக இருக்கும் என்ற கருத்தை உள்ளடக்கிய கதை. அப்படி வாழும் ஒரு குடும்பத்திற்கு சில சமூக விரோதிகளால் நிறைய பிரச்னைகள் உருவாகிறது. அந்த குடும்பத்தை சேர்ந்த அண்ணன்…
Read More
இரும்புத்திரை ரிலீஸின்போதுதான் பணத்தை அருமையை உணர்ந்தேன்! – விஷால் பேச்சு

இரும்புத்திரை ரிலீஸின்போதுதான் பணத்தை அருமையை உணர்ந்தேன்! – விஷால் பேச்சு

கோலிவுட்டில் ஒற்றை ஆளாய் அதகளம் செய்து கொண்டிருக்கும்  விஷாலுக்கு சொந்தமான சொந் பிலிம் பேக்டரி தயாரிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்றிருக்கும் திரைப்படம் “ இரும்புத் திரை “ ... இதில் விஷால் , அர்ஜுன் , சமந்தா நடிப்பில் , யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளிவந்து அனைவரிடமும் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ள இத்திரைப்படத்தின் வெற்றி விழா மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் விஷால் , அர்ஜுன் , இயக்குனர் மித்ரன் , எடிட்டர் ரூபன் , கலை இயக்குனர் உமேஷ் , நடிகர் காளி  வெங்கட் , ரோபோசங்கர் , எழுத்தாளர்கள் ஆண்டனி பாக்யராஜ் , பொன் பார்த்திபன் , காஸ்டியூம் டிசைனர் சத்யா , ஜெயலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டார். விழாவில் விஷால் பேசியது :-        இந்த படத்தில் நான் பல காட்சிகளில் மிகவும் உண்மையாக யதார்த்தமாக நடித்தேன். ஒரு…
Read More
ஒத்தைப் பாட்டு இவ்வளவு உசரத்தைக் கொடுத்துடுச்சு! – ’காளி’ நாயகி  ஷில்பா மகிழ்ச்சி

ஒத்தைப் பாட்டு இவ்வளவு உசரத்தைக் கொடுத்துடுச்சு! – ’காளி’ நாயகி ஷில்பா மகிழ்ச்சி

சுட்டெரிக்கும் வெயில் மாசமான இந்த மே மாசம் 18ஆம் தேதி வெளி வர உள்ள "காளி" மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்றால் மிகை ஆகாது.விஜய் ஆண்டனி நடித்து , இசை அமைக்க , விஜய் ஆண்டனி பிலிம் கார்பொரேஷன்  சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்கும் "காளி" படத்தில் வரும் "அரும்பே" இணைய தளத்தில் ரசிகர்கள் இடையே ஏக வரவேற்பை பெற்று உள்ளது.அந்த பாடலில் விஜய் ஆண்டனியுடன் காதல் ரசம் சொட்ட நடித்து இருக்கும் இந்த படத்தின் கதாநாயகிகளில் ஒருவரான ஷில்பா மஞ்சுநாத்,  இப்போதே ரசிகர்களின் கனவு கன்னியாகி தனக்கென்று ஒரு தனி இடத்தை நிர்மானித்துக் கொண்டு உள்ளார். " காளி படத்தில் ஒரு கதாநாயகியாக தமிழ் திரை உலகில் அறிமுகமாவது மிக மிக பெருமைக்கு உரியது. சற்றும் கவனத்தை திசை திருப்பாத திரைக்கதை, மற்றும் தமிழ் திரை உலகின் திறமைகள் அனைத்தும் சங்கமிக்கும் சக நடிகர் மற்றும் தொழில் நுட்ப…
Read More
இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்துக்கு இம்பூட்டு ரெஸ்பான்சா? – புரொடியூசர் ஹேப்பி

இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்துக்கு இம்பூட்டு ரெஸ்பான்சா? – புரொடியூசர் ஹேப்பி

அருள்நிதி, மஹிமா நம்பியார் நடித்த இரவுக்கு ஆயிரம் கண்கள் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியுள்ளது. கடந்த வார இறுதியில், கடும் போட்டியில்  வெளியான 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' இரும்பு திரையின் இறுக்கமான பிடியையும் உடைத்து வெள்ளித்திரையை தன் வசப்படுத்தியது. மிகவும் புதிரான திரைக்கதையும் தான் அதற்கு ஒரு முக்கிய காரணம். இந்த கிரைம் திரில்லர் படத்தை புத்திசாலித்தனமான திரைக்கதையிக் கொடுத்த இயக்குனர் மு மாறன் பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார். நல்ல கதைகளை தேர்ந்தெடுப்பதால் தான் நட்சத்திரங்கள் உருவாகிறார்கள் என்ற நாயகன் அருள்நிதியின் தத்துவத்தை அவரே நிரூபித்திருக்கிறார். நல்ல நடிப்பு தான் ஒரு வெற்றிப் படத்தின் உரம் என்றால், இரவுக்கு ஆயிரம் கண்கள் அந்த சிறந்த நடிப்பை அதிகமாகவே கொண்டிருக்கிறது. உயர்ந்த நல்ல மனதை உடைய மஹிமா நம்பியார், மீண்டும் தலையெடுக்கும் சாயா சிங், சக்தி வாய்ந்த ஆனந்த ராஜ், எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கும் கொலைகாரன் அஜ்மல், நம்பும்படியான…
Read More
பாலகுமாரன் படைப்புகளால் மரணத்தை வென்று நீண்ட காலம் தமிழோடு வாழ்ந்திருப்பார்!- வைரமுத்து அஞசலி

பாலகுமாரன் படைப்புகளால் மரணத்தை வென்று நீண்ட காலம் தமிழோடு வாழ்ந்திருப்பார்!- வைரமுத்து அஞசலி

தமிழ் வாசகர்களின் ஆதர்சன எழுத்தாளரும் திரைப்பட பிரபலச் வசனகர்த்தாவுமான பாலகுமாரன் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று (மே 15) காலமானார். அவருக்கு வயது 71. தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி என்ற சிற்றூரில் பிறந்த பாலகுமாரனுக்கு, தமிழ் எழுத்துலகில் தனி இடம் உண்டு. தொடக்கத்தில் கவிதைகள் எழுதிவந்த இவர், அதன் பின் கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள் என பலவற்றையும் எழுதினார். மெர்க்குரிப் பூக்கள், கரையோர முதலைகள், பயணிகள் கவனிக்கவும், இரும்புக் குதிரைகள், சோழ சாம்ராஜ்யத்தின் புகழ் சொல்லும் கங்கை கொண்ட சோழன், உடையார் என 200க்கும் மேற்பட்ட நாவல்களும், 100க்கும் மேற்பட்ட சிறுகதைகளும் எழுதியுள்ளார். இதில் இரும்புக் குதிரைகள் நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார். எண்பது டூ தொண்ணூறுகளில் மிகப் பெரிய உச்சத்தில் இருந்து தன் எழுத்துக்களால் வாசகர்களைக் கட்டிப்போட்ட பாலகுமாரன். திரைத்துறையில் இருந்த ஆர்வத்தினால், இயக்குநர் கே.பாலசந்தரிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்து பணியாற்றினார். சிந்து பைரவி,…
Read More
நான் ஒரு சூப்பர் ஹீரோ கிடையாது! – ” காளி” நாயகன் விஜய் ஆண்டனி பேச்சு!

நான் ஒரு சூப்பர் ஹீரோ கிடையாது! – ” காளி” நாயகன் விஜய் ஆண்டனி பேச்சு!

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன்  ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா நடிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கியிருக்கும் படம் 'காளி'. மே 18ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் பத்திரிகையாளர்களுக்கு படத்தின் 20 நிமிட காட்சிகள் பிரத்யேகமாக திரையிட்டு காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து படத்தை பற்றிய சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டனர் படக்குழுவினர். விஜய் ஆண்டனியுடன் 4 படங்களில் வேலை பார்த்திருக்கிறேன். ரொம்பவே பாஸிடிவான மனிதர். எடுத்த காரியத்தில் நம்பிக்கை வைத்து வெற்றி பெறுபவர், அதை நான் அவரிடமிருந்து கற்றுக் கொண்டேன். ரொம்ப ஸ்ட்ராங்கான டீம் இந்த படத்தில் அமைந்தது பெரிய ப்ளஸ் என்றார் கலை இயக்குனர் சக்தி வெங்கட்ராஜ். ஆண்கள் மட்டுமே அளுமை செய்யும் திரையுலகில், பெண்கள் இணைந்து ஆளுமையோடு உருவாக்கி இருக்கும் படம் தான் இந்த காளி, சிறப்பாக வந்துள்ளது. நிச்சயம்வெற்றி படமாக அமையும் என்றார் ரிச்சர்ட்…
Read More
என் வாழ்க்கையில் ஒரேயொரு கனவு என்ன தெரியுமா? – காலா விழாவில் ரஜினி பேச்சு முழு விபரம்

என் வாழ்க்கையில் ஒரேயொரு கனவு என்ன தெரியுமா? – காலா விழாவில் ரஜினி பேச்சு முழு விபரம்

தனுஷ்-ஷின் வுண்டர்பார் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் காலா. பா.ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினிகாந்த், ஈஸ்வரிராவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. விளையாட்டு மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக ரஜினிகாந்த் ரசிகர்கள் சுமார் 10 ஆயிரம் பேருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்தது. இதனால் மைதானம் முழுவதும் ரஜினி ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. எங்கு பார்த்தாலும் ரஜினிகாந்தை வாழ்த்தி ரசிகர்கள் கோஷமிட்டப்படி இருந்தனர். பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த விழா மேடை, முழுவதும் கருப்பு நிறத்தால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ரஜினி உட்பட படக்குழுவினர் ஒருசிலரைத் தவிர அனைவரும் கருப்பு நிற உடையில் வந்திருந்ததால், மேடை முழுவதும் கருப்பு மயமாகக் காட்சி அளித்தது. நிகழ்ச்சியை டிடி தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியின் ஆரம்பமாக நடன இயக்குநர் சாண்டி, ரஜினி டயலாக்குகள் மற்றும் பாடல்கள் அடங்கிய தொகுப்புக்கு நடனமாடினார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் சுமார் 15 நிமிடம் தனது…
Read More
டிராஃபிக் ராமசாமி ‘டீசர் – சகாயம் ஐ.ஏ.எஸ் வெளியிட்டார் !

டிராஃபிக் ராமசாமி ‘டீசர் – சகாயம் ஐ.ஏ.எஸ் வெளியிட்டார் !

‘டிராஃபிக் ராமசாமி’ படத்தின் டீசரை சகாயம் ஐ.ஏ.எஸ்.  இன்று மாலை 6 மணிக்கு வெளி யிட்டிருக் கிறார். படத்தின் முன்னோட்டம் மற்றும் சில காட்சிகளைப் பார்த்த சகாயம் கூறும் போது , “டிராஃபிக்  ராமசாமி ஒரு அரியவகை சமூக செயற்பாட்டாளர் . தைரியமாக சாலையில் இறங்கிப் போராட்டம் செய்பவராக தொடங்கி பல்வேறு தளங்களில் இந்த 85 வயதிலும் தன்னிச்சை யாகவும் தன்னம்பிக்கையோடும் அநீதிக்கு எதிராகப் போராடி வரும் போராளி. அவரின் வாழ்வை பிரதிபலிக்கும் விதமாக டிராஃபிக் ராமசாமி படம் உருவாகியுள்ளது. https://www.youtube.com/watch?v=Ea7KESiZSP4&feature=youtu.be துணிச்சலான கருத்துகள் கூறித் தன் படங்களின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் படத்தில் டிராஃபிக் ராமசாமியாக நடித்ததுடன் தயாரித்தும் இருக்கிறார். இப் படத்தின் முன்னோட்டம் பார்த்தேன். இது நிச்சயம் சமூகத்தின் குரலுக்கான படமாக இருக்கும் என்று நம்புகிறேன், வாழ்த்துக்கள்.” என்று பாராட்டி வாழ்த்தினார். இப்பட த்தில் கதை நாயகனாக எஸ்.ஏ. சந்திரசேகரன் நடிக்க அவரது மனைவியாக ரோகினி நடிக்கிறார்.…
Read More
விஷாலின் ‘இரும்புத்திரை’ படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் செய்யுது ஒரு மாஃபியா கும்பல்!

விஷாலின் ‘இரும்புத்திரை’ படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் செய்யுது ஒரு மாஃபியா கும்பல்!

காஞ்சி போன பூமியெல்லாம் வத்தாத நதியைப் பாத்து ஆறுதலையும்.. அந்த நதியே காஞ்சி போயிட்டா.. என்ற டயலாக்கின் நிகழ்கால வடிவமாகி விட்டார் விஷால். ஆம்.. நடிகர் விஷால், சமந்தா நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘இரும்புத்திரை’. இந்தப் படம் வரும் மே 11 வெள்ளிக்கிழமையன்று வெளியாக உள்ளது. இதற்கான விளம்பர வேலைகள் அனைத்தும் தற்போது மும்முரமாக நடைபெற்று வரும் வேளையில் இந்தப் படத்திற்கு தமிழ்த் திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பின் தலைவரான அருள்பதி மறைமுகமாக தடை விதித்திருப்பதால் இதுவரையிலும் தியேட்டர்கள் உறுதி செய்யப்படவில்லையாம். விநியோகஸ்தர் அருள்பதி தமிழ்த் திரைப்பட துறையில் பலம் வாய்ந்த சென்னை, செங்கல்பட்டு மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவராகவும் இருப்பதால் அவருடைய உத்தரவின் பேரில்தான் ‘இரும்புத் திரை’ படத்திற்கு மறைமுகமாக தடை விதிக்கப்பட்டிருப்பதாக படத்தை வெளியிட இருக்கும் விநியோகஸ்தர் ஸ்ரீதரனும், தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமாரும் புகார் கூறியுள்ளார். இது பற்றி இன்று மதியம் நடைபெற்ற அவசர பத்திரிகையாளர் சந்திப்புக் கூட்டத்தில்…
Read More
error: Content is protected !!