23
Nov
கலாபிரபு… தமிழ் சினிமாவின் தலையாய தயாரிப்பாளரின் மகன். நினைத்திருந்தால் முதலாளி யாகவே இருந்திருக்கலாம். ஆனால் பிடிவாதமாக இயக்குநர் துறையைத் தேர்ந்தெடுத்து அதில் சாதித்துக் காட்டும் முனைப்புடன் இரண்டாவது படத்தை இயக்கி முடித்து விட்டார். படம் நாளை வெளியாகிறது. அதற்கு முன் கலாபிரபுவிடம் பேசியதில் இருந்து… இந்திரஜித் ட்ரெய்லர் பார்த்தாலே பெரிய பட்ஜெட்னு தெரியுதே? என்ன கேட்க வர்றீங்கன்னு புரியுது. இந்தக் கதை எழுதும்போதே இவ்வளவு செலவு ஆகும்னு தெரியும். அட்வென்சர் படம் -ங்கறப்போ அந்த செலவு நியாயமானதா இருக்கும். டெக்னிக்கலா நிறைய விஷயங்கள் தேவைப்பட்டுச்சு. டெய்லி மூணு, நாலு கேமரா செட்டப்ல ஷூட் பண்ணினோம். ஆனா ஒரு படத்தோட வெற்றியை பட்ஜெட் மட்டுமே நிர்ணயிக்காதுனு ஒரு இயக்குநரா நம்புறேன். அதனால ஸ்க்ரிப்ட்லயும் மேக்கிங்லயும் காம்ப்ரமைஸ் ஆகலை. நானே ஒரு காடுகளின் காதலன்கறதால எனக்கு இந்த சப்ஜெக்ட் ஈசியா இருந்தது. இதுல ஹீரோ கேரக்டர் ட்ராவல் பண்ணதுல முக்கால்வாசி நான் ஏற்கனவே பண்ணியிருக்கேன். வேலையா…