24
Nov
எஸ் சினிமா சார்பில் ஆனந்த் பையனூர், வினோத் ஷொர்னூர் தயாரிப்பில் நிவின் பாலி, நடராஜ் சுப்ரமணியம், ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரிச்சி’. கௌதம் ராமச்சந்தி ரன் இயக்கியுள்ள இந்த படத்துக்கு அஜனீஷ் லோக்னாத் இசையமைத்துள்ளார். டிசம்பர் 8ஆம் தேதி ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் பிரமாண்டமாக வெளியிடும் இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவை ஜிகே ரெட்டி, நிவின் பாலி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், கௌதம் ராமச்சந்திரன், ஆனந்த் பையனூர், லக்ஷ்மி பிரியா ஆகியோர் குத்து விளக்கேற்றி துவங்கி வைத்தனர். விழாவில் “நிவினை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. இளம் பெண்கள் முதல் வயதானவர்கள் வரை எல்லோருக்கும் நிவின் பாலியை பிடிக்கும். நிவினை பார்க்கும் போது இளம் வயது மோகன்லாலை பார்ப்பது போல் இருக்கிறது. வழக்கறிஞராக இருந்த கௌதம் இந்த படத்தை மிகச்சிறப்பாக உருவாக்கி இருக்கிறார் என்றார் நடிகை துளசி. கடந்த மூன்று வாரங்களாக…