24
Jan
நல்ல திரைப்படங்களை வெளியிட வேண்டும்; தயாரிக்கவும் வேண்டும் என்ற எண்ணத்தில் திரையுலகுக்கு வந்திருப்பவர் ஆர் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல். இவர், நேற்று இன்று, இரவும் பகலும் வரும், போக்கிரி மன்னன் ஆகிய படங்களை வாங்கி வெளியிட்டார். தற்போது இவர் ஒற்றைப் பனை மரம் என்ற புதிய படத்தை தயாரித்து வெளியிட இருக்கிறார். ‘போர் முடிவுறும் இறுதி நாட்களில் ஆரம்பிக்கும் இப்படம், சமகால சூழலில் முன்னாள் போராளி களும் மக்களும் முகம் கொடுக்கும் சொல்லத் துணியாத கருவை தெள்ளத் தெளிவாக உருவாக்கி இருக்கிறார்கள். யதார்த்த நடிப்பு, இயல்பான காட்சியமைப்பு, இதயத்தை கனத்துப்போக வைக்கும் திருப்பங்கள் என கதைக்குள் உங்களை அழைத்துச் சென்று, ஈழத்தில் கிளிநொச்சியில் உள்ள கிராமத்தில் வாழ வைத்து வதைத்து விடும் அளவிற்கு இப்படத்தை உருவாக்கி இருக்கிறார் கள். இப்படத்தை தயாரித்தது குறித்து எஸ்.தணிகைவேல் கூறும்போது, ‘ஒற்றைப் பனை மரம்’ திரைப் படத்தை தயாரித்ததில் மிகவும் மகிழ்ச்சி…