இது ஒரு லாலாலா படம்! – விக்ரம் வேதா’ குறித்து விஜய் சேதுபதி

இது ஒரு லாலாலா படம்! – விக்ரம் வேதா’ குறித்து விஜய் சேதுபதி

 மாதவன், விஜய் சேதுபதி, ஷரதா ஸ்ரீநாத், வரலெட்சுமி, கதிர் உள்ளிட்ட பலர் நடிப்பில் புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் உ ருவாகியிருக்கும் படம் 'விக்ரம் வேதா'. ஜூலை 7-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்சியில் விஜய் சேதுபதி பேசிய போது "நடிப்பில் சுதந்திரத்தை முழுமையாக உணர்ந்த இடம் 'விக்ரம் வேதா' படப்பிடிப்பு தளம் தான். எனக்கு இப்படத்தில் பங்குள்ளது என நினைத்து முழுமையாக பணி யாற்றியுள்ளேன். 2014-ம் ஆண்டு இப்படத்தின் கதையைக் கேட்டேன். தற்போது படமாக பார்க்கும் போது பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கிறது. இந்தப் படத்தின் மொத்த கனவையும் நனவாக்கியது ஷசிகாந்த் சார் தான். ஏனென்றால் அவருடைய ரசனை மிகவும் பெரியது. ஒரு தயாரிப்பாளருக்கு படத்தின் ரசனை மிகவும் முக்கியம். அது ஷசிகாந்திடம் நிறைய உள்ளது. வரலெட்சுமி, கதிர் மற்றும் விவேக் உள்ளிட்ட யாருமே ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல. மாதவனுக்கும் எனக்கும் எது முதல் காட்சியோ, அது தான்…
Read More
தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: சிறந்த தமிழ்ப்படம் ஜோக்கர்- வைரமுத்துவுக்கும் விருது!

தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: சிறந்த தமிழ்ப்படம் ஜோக்கர்- வைரமுத்துவுக்கும் விருது!

2016ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. ரஸ்தம் படத்தில் நடித்த இந்தி நடிகர் அக்ஷய் குமார் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ‘மின்னாமினுங்கு-தி ஃபயர்ஃப்ளை’ என்ற மலையாளப் படத்தில் நடித்த சுரபி சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த படத்துக்கான விருது, கசாவ் என்ற மராத்தி படத்துக்குக் கிடைத்துள்ளது. ‘வென்டிலேட்டர்’ என்ற மராத்திப் படத்தை இயக்கிய ராஜேஷ் மபுஸ்கர் சிறந்த இயக்குனராக தேர்வாகி உள்ளார். சமூக பிரச்னைகளை சிறப்பாகச் சொன்னப் படத்துக்கான விருதுக்கு அமிதாப் பச்சன் நடித்த ‘பிங்’ தேர்வு செய்யப்பட்டு உள்ளது. சிறந்த இந்திப் படத்திற்கான விருது சோனம் கபூர் நடித்த ‘நீரஜா’வுக்குக் கிடைத்துள்ளது. இந்தப் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு சிறப்பு விருதும் கிடைத்துள்ளது. குழந்தைகளுக்கான சிறந்தப் படமாக ‘தானக்’ என்ற தெலுங்குப் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த துணை நடிகைக்கான விருது ‘தங்கல்’ படத்தில் நடித்த காஷ்மீர் நடிகை சாய்ரா வாஸிமிற்கு கிடைத்துள்ளது. ஜோக்கர் தமிழில்…
Read More
‘அக்ராஸ் பிலிம்ஸ்’ வெளியிடும் “ குற்றம் 23

‘அக்ராஸ் பிலிம்ஸ்’ வெளியிடும் “ குற்றம் 23

வியாபாரம், வர்த்தகம் மற்றும் விளம்பரம் ஆகிய துறைகளில் ஏறக்குறைய 12 வருட கால சிறந்த  அனுபவத்தை பெற்று, தற்போது திரையுலகின் வர்த்தக உலகில்  தனக்கென ஒரு அடையாளத்தை பதித்து  இருக்கிறார், 'அக்ராஸ் பிலிம்ஸ்' நிறுவனத்தின் நிறுவனர் பிரபு வெங்கடாச்சலம்.  முன்னதாக  வேறொரு பிரபல  தயாரிப்பு நிறுவனத்துடன்  இணைந்து பணியாற்றி, தரமான கதையம்சம் நிறைந்த படங்களை மட்டுமே  தேர்வு செய்யும் யுக்தியை நன்கு அறிந்து கொண்ட  பிரபு வெங்கடாச்சலம், 'டூ மூவி பஃப்ஸ்' நிறுவனத்தோடு கைக்கோர்த்து 'திட்டம் போட்டு திருடற கூட்டம்' படத்தை தற்போது தயாரித்து வருகிறார். அதுமட்டுமின்றி 'கொடி' திரைப்படத்தின் சேலம் பகுதி விநியோக உரிமையை வாங்கி வெளியிட்டது மூலம், விநியோக துறையிலும் கால் பதித்து இருக்கிறார். அந்த வெற்றியை தொடர்ந்து, திரையுலகின் மூத்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணுவோடு இணைந்து, 'பறந்து செல்ல வா' படத்தையும் தமிழகத்தில் பிரபு வெங்கடாச்சலம் விநியோகம் செய்தது குறிப்பிடத்தக்கது.  விநியோக துறையில் நல்லதொரு பெயரை…
Read More
நியூஸிலாந்தில் பிறந்தாலும் தமிழ்ப் படத்தில் நடிக்க விரும்பும் மாடல் !

நியூஸிலாந்தில் பிறந்தாலும் தமிழ்ப் படத்தில் நடிக்க விரும்பும் மாடல் !

தமிழ்த் திரைப் படங்களில் பிற மாநிலத்திலிருந்து பல்வேறு மொழிகளிலிருந்து நடிக்க வந்து நடிகைகள் அறிமுகமாகி பிரபலமாகி வருகிறார்கள். கண்டம் விட்டுக் கண்டம் வந்து கங்காரு தேசத்திலிருந்து தமிழ்ப் படங்களில் நடிக்க ஒருவர் பெரிதும் ஆர்வமாக இருக்கிறார் .அவர் பெயர் சபிஜே. இவர் சர்வதேச மாடல். மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பங்கு பெற்றவர். நியூஸிலாந்தில் பிறந்து ஆஸ்திரேலியாவில் வளர்ந்தவர். சர்வதேச மியூசிக் வீடியோக்களில் நடித்திருப்பவர். இனி சபிஜே வுடன் பேசுவோம். உங்கள் முன்கதைச் சுருக்கம் கொஞ்சம் சொல்லுங்களேன்? நான் தமிழ்ப் பெண்தான். எங்களுக்கு பூர்வீகம் ஸ்ரீலங்கா. அங்கிருந்து அப்பா அம்மா எல்லாரும் நியூஸிலாந்து போய் தங்கிவிட்டனர். நான் அங்குதான் பிறந்தேன். படித்தது ஆஸ்திரேலியாவில். பி.காம் முடித்திருக்கிறேன். ஒருகட்டத்தில் எனக்கு மாடலிங் மீது ஆர்வம் வந்தது. நான் நியூஸிலாந்து ,ஆஸ்திரேலியா என்று இரு நாடுகளிலும் பல மியூசிக் வீடியோக்களில் தோன்றியிருக்கிறேன். ஆஸ்திரேலிய அரசு விளம்பரம் உள்பட பல விளம்பரங்களிலும் நடித்தேன். எனக்கு பங்கரா நடனம்…
Read More
இரண்டு எமதர்ம ராஜாக்கள்” ‘எமன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி

இரண்டு எமதர்ம ராஜாக்கள்” ‘எமன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி

வர்த்தக உலகில் தனக்கென ஒரு அடையாளத்தை பதித்து இருக்கும் விஜய் ஆண்டனியின் அடுத்த திரைப்படம் 'எமன்'. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா, பிப்ரவரி 4 ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள 'சத்யம்' திரையரங்கில் விமர்சையாக நடைபெற்றது. பிரம்மாண்டமாக நடைபெற்ற  இந்த இசை வெளியீட்டு விழாவில், விஜய் சேதுபதி, எஸ் எ சந்திரசேகர், 'கோபுரம் பிலிம்ஸ்' அன்புசெழியன், 'ஸ்டுடியோ கிரீன்' ஞானவேல் ராஜா, 'எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ்' மதன், 'அம்மா கிரியேஷன்ஸ்' டி சிவா, 'ஐங்கரன்' கருணாஸ், காட்ராகட பிரசாத், 'கே ஆர் பிலிம்ஸ்' சரவணன், தயாரிப்பாளர் நந்தகோபால், கிருத்திகா உதயநிதி, இயக்குநர் சசி, இயக்குநர் அறிவழகன், இயக்குநர் என் ஆனந்த் (இந்தியா - பாகிஸ்தான்), இயக்குநர் மகிழ்திருமேனி, இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி, தனன்ஜயன் கோவிந்த், இசையமைப்பாளர் ஜிப்ரான், ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம், நடிகர் கலையரசன், நடிகை ரூபா மஞ்சரி மற்றும் 'எமன்' படத்தின் படக்குழுவினராகிய தயாரிப்பாளர் 'லைக்கா புரொடக்ஷன்ஸ்' ராஜு மகாலிங்கம்,…
Read More
தனுஷ் – அனிருத் ஜோடி மீண்டும் இணையுமாம்!

தனுஷ் – அனிருத் ஜோடி மீண்டும் இணையுமாம்!

தனுஷ் நடித்த ‘3‘ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத்.குறிப்பாக தனுஷ், அனிருத் கூட்டணி கொலவெறி பாடல் மூலம் உலகையே திரும்பிபார்க்க வைத்தது. இவர்கள் இருவரும் இணைகிறார்கள் என்றால் பாடல்கள் நிச்சயம் ஹிட் என்ற நிலை இருந்தது.. ‘வேலையில்லா பட்டதாரி’, ‘மாரி’, ‘தங்கமகன்’ ஆகிய தனுஷ் நடித்த படங்களுக்கும், ‘எதிர்நீச்சல்’, ‘நானும் ரவுடிதான்’ ஆகிய தனுஷ் தயாரித்த படங்களுக்கும் இவரே இசையமைப்பாளராக பணிபுரிந்தார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சிம்புவுடன் சேர்ந்து அனிருத் இசையமைக்கும் பீப் பாடல் மூலம் அனிருத்துக்கும் தனுஷ்க்கும் இடயிலான பிரிவு ஆரம்பமானது. அதைத் தொடர்ந்து தனுஷ் தயாரித்து நடித்த கொடி, பவர் பாண்டி படம் மற்றும் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கும் புதிய படத்திற்கு ஷா ரோல்டன் இசையமைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்து இவர்கள் பிரிவு நிரந்தரம் என்றே தகவல் பரவி வந்தது. இந்நிலையில், தாங்கள் பிரிந்தது தற்காலிகம்தான். நான் மீண்டும் தனுஷ் படத்துக்கு இசைய மைப்பேன் என்று அனிருத் கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் மேலும்…
Read More